பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது.......
(சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள்)
எத்தனை அர்த்தம் நிறைந்த வரிகள் இவை.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே!
நல்லவர்களோ, கெட்டவர்களோ... அல்லது புத்தியுள்ளவர்களோ, புத்தியற்றவர்களோ... எவராயினும் சரி. அவர்களுக்கென்று சரியானதொரு இடம் கிடைத்து விட்டால் போதும். வாழ்க்கையில் வென்று விடுவார்கள்.
பணமுள்ள புத்தியற்றவன் முன் பணமற்ற புத்தியுள்ளவன் தாழ்ந்து போவதும்ä அதிகார பலமுள்ள கெட்டவனிடம் அதிகார பலமற்ற நல்லவன் தாழ்ந்து போவதும் நடப்பில் உள்ள விடயங்கள்தான். இவை இன்று நேற்று மட்டுமல்ல. என்றும் நடக்கும் சங்கதிகள்.
வீதியிலே ஊரும் பாம்பு மனிதர்களின் பார்வையில் பட்டாலே போதும். அடித்தே கொன்று விடுவார்கள். கருடனின் பார்வையில் பட்டால்..... அது பாம்புக்கு இன்னுமொரு இம்சை. இதே பாம்பு பரமசிவன் கழுத்தில் இருக்கும் போது அதன் கதையே வேறு. வீதியிலே கண்டதும் அடித்துக் கொல்லும் மனிதரே இரு கை தூக்கி பயபக்தியுடன் தொழுது விழுந்தெழுவார்கள். பரமசிவனின் கழுத்துக்குப் போனதால் அப்படியொரு மவுசு பாம்புக்கு. சந்தர்ப்ப வசத்தால் கிடைத்த அந்த உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு தன்னை யாராலும் நெருங்க முடியாதென்ற நம்பிக்கையுடன் கருடனைச் சுகம் விசாரிப்பது பாம்புக்குச் சுகமான விடயம்.
அதனால்தான்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
என்று கருடன் எரிச்சலுடன் சொல்கிறது.
மனிதருக்கிடையில் இருக்கும் இந்த உயர்ந்த நிலையில் இருப்பவருக்கும் தாழ்ந்த நிலையில் இருப்பவருக்குமான அந்தஸ்தின் அளவை பரமசிவனின் கழுத்திலிருக்கும் பாம்பையும் அதை வெல்லக் கூடிய கருடனையும் வைத்துச் சொன்னது மிகவும் பொருத்தமானதாகவும் ரசிக்கக் கூடியதாகவும் அதே நேரம் அதன் தாத்பர்யத்தை நன்கு உணர்த்துவதாகவும் உள்ளது.
இப்படத்தில் கூட கணவன் மனைவியாக பாத்திரமேற்றிருக்கும் முத்துராமனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் உயர்வு தாழ்வுப் போராட்டம். அனேகமான எந்த ஆண்களாலும் மனைவி தன்னை விட பணத்தாலோ அல்லது பதவியாலோ உயர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இங்கு ஜெயலலிதா சற்று உயர்ந்து விட்டதில் முத்துராமனின் மனதுக்குள் தாழ்வு மனப்பான்மையுடனான போராட்டம். அதனால் குடும்பத்தில் ஒற்றுமையின்மையும் குழப்பமும் விஸ்வரூபமெடுத்து தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்தத் தம்பதிகள் ஒற்றுமையான தம்பதிகள் யார்...? என்ற ஒரு போட்டியில் கலந்து கொள்ள வைக்கப் படுகிறார்கள். அப்போட்டியின் போதுதான் இப்பாடல் காட்சியாக்கப் படுகிறது. வீட்டினுள்ளே உயர்வு தாழ்வுப் போட்டியில் மனதால் பிரிந்திருக்கும் இத்தம்பதிகள் ஒற்றுமையான தம்பதிகளுக்கான இப்போட்டியிலே முதலிடத்தைப் பெறுகிறார்கள்.
இப்பாடல் வெளிவந்த காலத்தில் இதை முணுமுணுக்காதோரே இல்லையென்று சொல்லலாம். அவ்வளவு பிரபல்யமாக இருந்தது. ஏனெனில் பாடல் வரிகள் அத்தனை அர்த்தம் நிறைந்தனவாக இருந்தன.
வண்டி ஓடச் சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும். - அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்.
இவ்வரிகள் கூறுவதென்ன...?
வாழ்க்கை என்ற வண்டில் நிதானமாகவும், நேர்சீராகவும் ஓட கணவன் மனைவி என்ற இரு சக்கரங்களுமே பெரிது சிறிது என்ற பாகுபாடின்றி ஒரே அளவாக இருக்க வேண்டும். ஆனால் அனேகமான எல்லா வீடுகளிலும் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் அவனை விடச் சற்றேனும் தாழ்ந்தவள் என்றும்தான் கருதப்பட்டு வாழ்க்கை வண்டில் ஓடுகிறது. இல்லையென்றால் பெண்ணின் கை ஓங்கி, அதைச் சகிக்கும் பக்குவம் இன்றி ஆணின் மனம் சுருங்கி மனஉளைச்சலுடன் வாழ்வு கழிகிறது. இந்த இரண்டு வகையான வாழ்க்கையுமே வேதனையானவைதான்.
சரியான முறையில் நாம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் ஆணில்லாத ஒரு பெண்ணின் தனியான வாழ்க்கையோ, அல்லது ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமான ஒரு உலகமோ - அதே போல் பெண்ணில்லாத ஒரு ஆணின் தனியான வாழ்க்கையோ, அல்லது பெண்களே இல்லாத ஆண்கள் மட்டுமான ஒரு உலகமோ ஒரு போதும் சந்தோசமானதாகவோ, சுவையானதாகவோ அமையாது.
வாழ்க்கையென்றால் இரு பகுதியுமே நான் நீ என்ற போட்டி இன்றி நாம் என்று வாழ வேண்டும். உயர்வு தாழ்வு என்ற எண்ணம் மனதில் சிறிது கூட இன்றி நீயில்லாமல் நானில்லை என்ற உணர்வை மனதில் கொண்டு அன்பு கலந்த நட்போடு வாழ வேண்டும். அதுதான் தாம்பத்தியத்தின் தத்துவம்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
பாடலின் ஒவ்வொரு வரியிலும் எம்மால் நல்ல தத்துவார்த்தமான கருத்துக்களைக் கண்டு கொள்ள முடிகிறது.
பாடலின் இறுதி வரிகளான
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே
என்பது மனைவி ஜெயலலிதாவின் உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாது தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் தான் தாழ்ந்து போய் விட்டதாய் எண்ணும் முத்துராமனின் மனக்குமுறலைக் காட்டுவதாய் அமைகிறது.
இப்படத்தின் பெயர் கூட பெண்கள் சூரியகாந்திப்பூப் போல இருக்க வேண்டும் என்பதற்காகவே சூரியகாந்தி என வைக்கப் பட்டது.
அதில்தான் எனக்குக் கருத்து வேறுபாடு. பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் பெண்கள் பக்கம் தம்மைத் திருப்பத் தயாராக இருக்க வேண்டும்.
ஆண் துணையில்லாத பெண்ணோ, பெண் துணையில்லாத ஆணோ முழுமையான வாழ்க்கையை, முழுமையான மகிழ்வைப் பெறாமல்தான் வாழ்வார்கள்.
அப்படியிருக்க பெண் மட்டுமேன் சூரியகாந்திப்பூ போல் ஆக வேண்டும்...?
தாம்பத்தியத்தில் ஆணும் சூரியகாந்திப்பூ ஆகட்டுமே..!
சந்திரவதனா
யேர்மனி
30.3.2004
Friday, December 10, 2004
Wednesday, December 08, 2004
நதி எங்கே வளையும் ...?
நதி எங்கே வளையும்
கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்....
விதி எங்கே விளையும்.............???
அது யாருக்குத் தெரியும்...!
(உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்)
நதி எங்கே வளையுமென்பது கரைக்கும்
மதி எங்கே அலையும் என்பது ஆகாயத்துக்கும் தெரியும்
ஆனால் விதி............? அது எங்கே, எப்போது, எந்த ரூபத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது.
விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.
எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் அமைதியான முறையில் பாடப்படும் இப்பாடலைக் கேட்கும் போதே மனதில் ஒரு கேள்வி எழும்.
வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
உண்மையில் வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
இதென்ன கேள்வி...! வாழாமல் வேறென்ன செய்கிறோம் என்ற இளக்காரமான கேள்வி தொக்கிய பதில் உங்கள் மனதிலும் எழலாம்.
எம்மில் எத்தனை பேர் மனதில் எதையிட்ட சலனமும் இன்றி வாழ்க்கை என்னும் மேடையில் எமக்குக் கிடைத்த பாத்திரத்தை சந்தோசத்துடன் ஏற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தெளிவுடன் வாழ்கிறோம்.
"இப்பிடிச் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பமே! என்னோடுதானே அவன் படிச்சவன். அவனைப் போல என்னாலை முடியாமற் போச்சே.........! சா... பேய்த்தனம் பண்ணீட்டனே..! " என்று வருத்தப் பட்டு எமது நிலையில் நாமே திருப்தி கொள்ளாது எத்தனை தரம் சலனித்திருப்போம். அத்தனை தரமும் எமது சந்தோசங்களை நாங்கள் தொலைத்து விடுகிறோம் என்பதை மட்டும் மறந்து போகிறோம். எமக்குக் கீழே உள்ளவர் கோடி... என்று எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா? உயர்ந்தவர்களைப் பார்த்து தாழ்மை கொள்வதுதான் எமது பணியென்று கிடப்போம். மிஞ்சினால் பொறாமை கொள்வோம்.
நல்லவர்கள், மற்றவர் மேல் அனுதாபம் கொண்டவர்கள், எவர் மேலாவது பிரியம் கொண்டவர்கள், எமக்கென உறவுகளைச் சேர்த்துக் கொண்டவர்கள்.......... என்ற வரிசையில் நாம் இருந்தோமானால், "அது சரியா, இது சரியா, அவனுக்கேதாவது நடந்து விடுமா, இவன் மனதைப் புண் படுத்தி விட்டேனா........" என்பது போன்றதான உணர்வுச் சிந்தனைகளால் எம்மைக் குழப்பிக் கொள்வோம்.
ஒரு தாயாக இருந்தால் மகவை பாடசாலைக்கு அனுப்பி விட்டு அவனோ அவளோ வீட்டுக்குத் திரும்பி வரும் வரை சதா அதே நினைவாய் "சரியாகப் பாடசாலை போய்ச் சேர்ந்திருப்பானோ... அங்கு யாருடனும் சண்டை பிடிக்காமல் இருப்பானோ....... பரீட்சையை சரியாக எழுதியிருப்பானோ.. காலையில் சரியாகச் சாப்பிட்டிருப்பானோ... நல்ல படி வீடு வந்து சேருவானோ..." என்பது போன்றதான கேள்விகளால் மனசைக் குழப்பிக் கொண்டிருப்பதுவும் அந்த மகவு வீடு வந்து சேர்ந்ததும் அப்பாடா என்று நிம்மதியடைந்த கையோடு அடுத்து இன்னொன்றுக்காய் குழம்ப ஆரம்பிப்பதுவும் வழமையான விடயங்கள். தந்தையாயின் அவருக்கு இன்னுமொரு விதமான குழப்பம்.
இப்படியே......... சங்கிலித் தொடராய் உறவுகளைப் பிணைத்துக் கொண்டு.... சந்தோசங்களை மட்டும் தொலைத்துக் கொண்டு எதுக்காய் அலைகிறோம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிகிறோமா........?
இவ்வளவு மட்டுந்தான் என்றால் பரவாயில்லை. எங்கள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்துள்ள மிகப்பெரிய பயம் சாவைப் பற்றியது. நாம் இறந்து விடுவோம் என்ற பயத்தை விட எமக்குப் பிரியமானவர்களை இழந்து விடுவோம் என்ற பயம்தான் எமது மனதின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்து சதா மனதைப் பதைக்க வைக்கிறது.. பிறப்பவர் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதியென்றாலும் அதை எதிர் கொள்ள மட்டும் எமது மனம் தயாராக இருப்பதில்லை. ஏதாவது ஏடாகூடமாக நடந்திடுமோ..? என்றே எப்போதும் பயந்து கொண்டிருப்போம். எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி அநுபவிக்கும் அந்தச் சந்தோசத்தைக் கூட, இப்படியான பயம் நிறைந்த துன்பச் சலனங்களால் அறுபது வருடங்கள் வாழும் மனிதராகிய நாம் அநுபவிக்கத் தவறி விடுகிறோம்.
அதைக் கவிஞர்
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை
என்று மிகவும் சாதாரணமான வார்த்தைகளைக் கோர்த்துச் சொல்லி விடுகிறார்.
உண்மையில் நாளைக்கு என்ன நடக்கும் என்று யோசித்து யோசித்தே இன்றைய பொழுதை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.
எந்த நிலையிலும் துவண்டு விடாது, நாளையை எண்ணிப் பயந்து கொண்டிராது இன்றைய வாழ்வை நாம் வாழ வேண்டும். அதற்காக எல்லாம் விதி என்று சொல்லி விட்டு, நாம் முயற்சி செய்யாதும் இருந்து விடக்கூடாது.
அதைக் கவிஞர் சொல்லும் விதம் மிகவும் அழகு.
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...
இவ் வரிகளைக் கேட்கும் போதே துன்பம் என்னும் ஆடையை களைந்து ஒரு புறம் வைத்து விட்டு இன்பத்தை அணிந்து வாழ வேண்டும் என்றதொரு துணிவும், எதிலும் மகிழ்வைத் தேட வேண்டுமென்ற மகிழ்வான எண்ணமும் நெஞ்சில் தோன்றுகிறது.
வாழ்வில் மரணம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த இழப்புக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. எதை இழந்தாலும் மனம் தளர்ந்து போகாது மீண்டும் முயற்சித்தோமானால் அதைத் திரும்பப் பெற முடியாவிட்டாலும் வேறொன்றில் வெற்றியைப் பெற முடியும். இப் பாடலைக் கேட்கும் போது மனதில் அந்த அந்த நம்பிக்கையும் தைரியமும் எழுகிறது.
கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
பாடலின் வரிகள் அர்த்தங்களில் மட்டும் அழகு கொண்டிராமல், அதைக் கவிதையாக்கிச் சொல்லிய விதத்திலும் மிகுந்த அழகைக் கொண்டுள்ளது.

Monday, December 06, 2004
சினிமாப்பாடல்கள் எனது பார்வையில் - 14
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
படம் - தில்லானா மோனாம்பாள்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.
என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.
வந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.
அந்த வகையில் 1968இல் A.P.நாகராஜனின் இயக்கத்தில் உருவான தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.
இப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.
பத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.
எப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா...?
என்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...
என்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.
மொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................

Friday, December 03, 2004
சினிமாப்பாடல்கள் 13
படம் - இருவர்
பாடியவர் - சந்தியா
வரிகள் - வைரமுத்து
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
சின்ன வயதில் என் அப்பாவுடன் நிறைய சிவாஜி கணேசனின் படங்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கேற்ப திருமணத்தின் பின் என் கணவருடன் நிறைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர் இன் நடிப்பில் எனக்கு அந்தளவாக ஈடுபாடு ஏற்படவில்லையானாலும், எம்.ஜி.ஆர் இன் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப் பட்ட இருவர் படம் எனக்குப் பிடித்திருந்தது. படத்தில் மோகன்லாலை மோகன்லாலாகப் பார்க்க முடியாமல் அவரது நடிப்பு எம்.ஜி.ரையே பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அத்தோடு படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு காலகட்டத்துக்கேற்ப அமைக்கப் பட்டிருந்தது மட்டுமல்லாமல், வைரமுத்துவின் கவிதை வரிகளும், ரகுமானின் இசையும் சேர்ந்து இடம்பெற்ற எல்லாப் பாடல்களுமே குறிப்பிடத் தக்கவகையில் நன்றாகவும் அமைந்திருந்தன. அவைகளில் 'நறுமுகையே.. நறுமுகையே...' என்ற உன்னிகிருஸ்ணன்-பம்பாய்ஜெயசிறீ இணைந்து பாடிய பாடலும், 'பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை...' என்ற சந்தியா பாடிய இந்தப் பாடலும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன.
1962 இல் ஏற்கெனவே எம்.ஜி.ருடன் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜானகி, வீட்டில் உள்ள அழுத்தம் தாங்க முடியாத நிலையில், எம்.ஜி.ருடன் விரும்பி வாழ முற்பட்ட நிலை இப்பாடல் மூலம் காட்டப் பட்டுள்ளது.
பழைய காலப் படங்களில் வரும் காட்சி போலவே அமைக்கப்பட்ட பாடற்காட்சியில், சந்தோசமான முன்பாதியும், சோகம் நிறைந்த பின்பாதியுமான பாடலுக்கு கெளதமியின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.
படம் பார்த்து முடிந்த பின்னும், நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடிய பின்னும்.. நிழல்கள் ரவியின் அதட்டலும், தனது சொந்த ஆதாயத்துக்காக கெளதமியை நடாத்திய விதமும், அந்தக் கொடுமைக்குள் அவதியுறும் கெளதமியும்... ஏதோ நிஜமான பாத்திரங்கள் போலவே, நினைக்கும் போதெல்லாம் மனதை நெருடிக் கொண்டிருந்தனர். அத்தனை தத்ரூபமாக கெளதமியும், நிழல்கள் ரவியும் நடித்திருந்தனர்.
நடிப்பு அற்புதமாக அமைந்த அதே நேரத்தில், பாடல் வரிகளும் அருமையாக அமைந்திருந்தன. நிழல்கள் ரவியின் கொடுமைக்குள் துன்புறும் கெளதமி, மோகன்லால் மேல் காதல் கொண்டு மோகன்லாலைத் தன்னை விட்டுப் போக வேண்டாமென்றும், மீண்டும் வேதனைக்குள் தள்ள வேண்டாமென்றும் கேட்டுப் பாடும்....
நீலம் மட்டும் இழந்து விட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
சூரியனை இழந்து விட்டால்
கிழக்குக்கொரு திலகம் இல்லை
நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால்
என் உயிருக்கு உறுதி இல்லை.
என்ற வரிகள் மிகவும் அழகானவையும், மனதைத் தொடுபவையும்.
பாடல்கள் இத்தனை நன்றாக அமைந்ததற்கு, நடிப்பு, பாடல் வரிகளின் அழகு மட்டுமல்லாது ரகுமானின் இசையும் காரணமாக இருந்தது. Westernmusic இன் பாணியிலேயே ரகுமானால் இசையமைக்க முடியும் என்று ஒரு சாரார் மத்தியில் இருந்த அதிருப்தியான எண்ணத்தை மாற்றும் படியாக, ரகுமானின் இப்பாடலுக்கான இசையமைப்பு அமைதியாக, அருமையாக அமைந்திருந்தது.
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்தப் பெளர்ணமி என்பது
ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன
என் வாழ்க்கையின் புன்னகை
உனது நிழல் தரை விழுந்தால்
என் மடியில் ஏந்திக் கொள்வேன்.
வான் மழையில் நீ நனைந்தால்
தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் என்னைச் சோதித்துப் பார்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்

Subscribe to:
Posts (Atom)