"எனக்கா, எனக்குமா....!? நானுமா....!?" அதிர்வுடன் அவளைக் கேள்விகள் மின்சாரமாய்த் தாக்க அவசரமாய்த் துடித்தெழுந்தாள், சோபாவில் சாய்ந்திருந்த சர்மிளா. உலகமே ஒரு தரம் தலைகீழாய்ச் சுழல்வது போலவும், வீட்டுக்கூரை நிலை கெட்டு ஆடுவது போலவும் ஒரு பிரமை அவளை மருட்டியது. தலை விறைத்து மனமெல்லாம் உதறல் எடுத்தது. மீண்டும் ஒருமுறை மார்பகத்தை ஒற்றை விரலால் மெலிதாக அழுத்தி அழுத்தி தடவிப்பார்த்தாள். "ஓம்......." தட்டுப்படுது. சின்னதாய் ஒரு கட்டி.
ஓவென்று கதறி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. துள்ளியெழுந்த வேகத்துடன் அப்படியே கம்பளத் தரையில் அமர்ந்து விட்டாள். இப்போது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.
காலையே வேலைக்குப் போனவள் வந்து பிள்ளைகள் பாடசாலையால் வரமுன்னம் அவசரமாய்ச் சமைத்து, அவர்கள் வர சாப்பாடு கொடுத்து ரியூசனுக்கு அனுப்பி விட்டாள்.
இப்போ சில நாட்களாகவே உடம்பில் ஒரு அசதி. எல்லாவற்றிலும் ஒரு மறதி. இடது பக்கத் தோள் மூட்டில் தாங்க முடியாத வலி. அதுதான் மாலையில் செய்யும் பகுதி நேர வேலைக்குப் போகுமுன் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி சோபாவில் சாய்ந்தவள்.
சாய்ந்து படுக்கும் போது இடது பக்கம் சாய்வதில் ஏதோ ஒரு பாரம் தெரிந்தது. முதுகுப் பக்கம் தெண்டுவது போல ஒரு அந்தரமாய் இருந்தது.. நிமிர்ந்து படுத்துப் பார்த்தாள். அது சுகமாக இருந்தது. பஞ்சி தீர்வது போலத் தெரிந்தது. அப்படியே படுத்திருந்த படியே அவளின் கைகள் தன்னையறியாமலே மார்பகங்களை மேயத் தொடங்கியது. அப்போதுதான் அந்தக் கட்டி அவள் விரல்களில் இடிபட்டு, மனதுள் ஒரு இடியை இறக்கியது. சில மாதங்களாகவே அவளையும் அவளது சக வேலையாட்களையும் வாட்டிக் கொண்டிருந்த வேதனையும் பயமும் இதுதான்.
ஐந்து மாதங்களின் முன்பு புதைகுழியில் கிடந்த எறீனாவின் மேல் பூங்கொத்தைப் போட்டு விட்டு, இனி மண்ணை அள்ளிப்போட்டு மூடி, நினைவுக்கல்லை நாட்டி விடுவார்களே என்ற கனத்த நினைப்போடு வந்த போதிலிருந்து மனசை விட்டகலாத சோகம்,-- சர்மிளாவால் அதை மறக்க முடிவதில்லை..
"எறீனா........!" பெருமூச்சொன்று சர்மிளாவையும் மீறி வெளிவந்தது.
பாஷை நிறம் என்று சர்மிளா அந்நியதேசத்தில் அந்நியப் பட்டு நின்ற போது அவளை அரவணைத்து அவளும் மனிதஜென்மம்தான் என்று உணர வைத்த அந்த வெண்மையான மென்மையான எறீனா. என்ன மாதிரி அழகாயிருந்தவள். சுற்றியுள்ள எல்லோரையும் எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவள், இயற்கையே சிரித்து நின்ற ஒரு அழகிய கோடை நாளில் அழுத விழிகளுடன் வேலைக்கு வந்தாள். வழமை போல் சர்மிளா தவிர்ந்த மற்றைய எல்லோரும் ஆல் போல் தழைத்து, அரசு போல் குடை விரித்திருந்த கஸ்தானியன் மரத்தின் கீழ் நின்று சிகரெட் புகைக்க, எறீனா மட்டும் வழமைக்கு மாறாக சர்மிளாவுடன் உள்ளே போனாள்.
உள்ளே போய் கதவைச் சாத்தியதுதான் தாமதம் சர்மிளாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். சர்மிளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் இப்படி எறீனா அழுகிறாள் என்பதுவும் தெரியவில்லை. ஆனாலும் எறீனாவின் அழுகை அவளை என்னவோ செய்ய "என்ன நடந்திட்டுதெண்டு இப்ப அழுறாய், தயவு செய்து சொல்லிப் போட்டு அழு." கலக்கத்துடன் அதட்டினாள்.
எறீனா உடனே சர்மிளாவை இழுத்துக் கொண்டு குசினிக்குள் ஓடினாள். தனது மேலாடைகளை அவசரமாக இழுத்துக் கழற்றினாள். சர்மிளாவின் சுட்டு விரலை அவள் அனுமதியின்றிப் பிடித்து, ஒரு ஆவேசத்துடன் இழுத்து, தனது இடது மார்பகத்தில் வைத்து "இப்போ அழுத்திப் பார்" என்றாள்.
சர்மிளாவுக்கு இப்போது எறீனாவின் குழப்பத்துக்கான காரணம் ஓரளவு புரிந்தாலும், விரலால் எதையும் உணர முடியவில்லை. "ஏன் இப்பச் சும்மா அழுறாய். அங்கை ஒண்டுமே தெரியேல்லை." என்றாள்.
"சரியாக அழுத்திப்பார். இதிலை. இதிலை." என்று தனது விரலாலேயே எறீனா சரியான இடத்தைக் காண்பித்தாள்.,
எறீனாவின் அழகிய பெரிய மார்பகத்தின் ஆழத்தில் சிறிதாக, கட்டியாக எதுவோ தட்டியது. இப்போதுதான் சர்மிளர்வுக்குத் திக்கிட்டது. நெஞ்சு படபடத்தது.
உயிர் சுமக்கும் கருவறைக்குள்ளும்
உதிரத்தைப் பாலாக்கி
உணவூட்டும் மார்பகத்துக்குள்ளும்
உயிர் கொல்லும் புற்றுநோயை
உருக்கொள்ள வைத்தது யார்?????
"ஆண்டவா...! அவள் உனக்கு என்ன பாபம் செய்தாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை? மூன்று உயிர்களைக் கருவிலே சுமந்து, தன் உதிரத்தைப் பாலாக்கி, இந்த மார்பகங்களால் தானே அக்குழந்தைகளுக்கு உரமூட்டி, இந்த உலகத்தில் நடமாட வைத்தாள். அந்தப் புனிதமான மார்பகங்களுக்குள் உயிர் கொல்லும் இந்த வைரசுக்கள் எப்படி வந்தன?"
இயற்கை மீதும் ஆண்டவன் மீதும் சர்மிளாவுக்கு அளவிலாத கோபம் வந்தது. ஆனாலும் அதை அவள் எறீனாவிடம் காட்டிக் கொள்ளாமல் , உடனேயே சமாளித்துக் கொண்டு "அது சும்மா கட்டியா இருக்கும். இதுக்குப் போய்ப் பயப்படுறியே..!" என்றாள்.
"இல்லை சர்மிளா, நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்டும் வெறும் பிரமையிலை இதைச் சொல்லேல்லை. எனக்கு முதல்லை இதைப் பற்றி ஒரு எண்ணமுமே வரேல்லை. இண்டைக்கு நான் சும்மா செக்கிங்குக்கு எண்டு Frauen Artzt (gynaecology- பெண்களுக்கான பிரத்தியேக வைத்தியர்)ட்டைப் போனனான். அவர்தான் இதைக் கண்டு பிடிச்சவர். உடனை அவற்றை முகமே கோணிப் போட்டுது. வழமையான அவற்றை புன்சிரிப்புக் கூட அப்பிடியே எங்கையோ ஒழிச்சிட்டுது. நாளைக்கு என்னை mammography செய்ய ஸ்பெஷல் டொக்டரிட்டைப் போகச் சொன்னவர். எனக்குச் சரியான பயமாயிருக்கு." மீண்டும் அழத் தொடங்கி விட்டாள்
"எறீனா..! சீ... சும்மா அழாதை. அது சும்மா ஒரு கட்டியாக(Tumor) இருக்கும். இப்பிடி வாற கட்டியளிலை, எப்பவுமே நாலைஞ்சு கட்டியள் துப்பரவா எந்தக் கெடுதியையும் விளைவிக்காத கட்டியளாத்தான் இருக்கும். அப்பிடியான அனேகமான கட்டியளுக்கு எந்த வைத்தியமும் செய்யத் தேவையில்லை. உதாரணமா Zysten (cyst- நீர் நிறைந்த பை) இது எந்தக் கெடுதியையும் விளைவிக்காது. அது போலை Mastopathien (ஹோர்மோன் மாற்றத்தாலை பால் சுரப்பிகளில் ஏற்படுகிற மாற்றங்கள்) இதுக்கும் பயப்படத் தேவையில்லை." சர்மிளா தனக்குத் தெரிந்தவைகளைச் சொல்லி எறீனாவைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள்.
எறீனாவை இந்த சமாதானஙகள் பெரிய அளவாக ஆறதல் படுத்தவில்லை. இது Fibroadenome(பால் சுரப்பிகளிலும் இணையச் சவ்வுகளிலும் வரும் கட்டி) ஆகவும் இருக்கலாம்தானே? குழப்பத்துடன் கேட்டாள்.
"Fibroadenome எண்டாலும் பயமில்லை. இவைகளும் கெடுதலை விளைவிக்காதவைதான். மார்பகத்தைக் கீறி அந்தக் கட்டியை மட்டும் எடுத்து விட்டால் போதும். உடம்பின்ரை மற்றப் பகுதியளுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
நீ நினைக்கிற மாதிரி பயப்பட ஒண்டுமில்லை. சும்மா தேவையில்லாமல் இதையெல்லாம் நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பாதை. உனக்கொண்டும் நடக்காது. இந்தா நான் கோப்பி போடுறன். குடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகு."
அன்று சர்மிளா எறீனாவை அப்படிச் சமாதானம் செய்து கோப்பியைப் போட்டுக் கொடுத்து குடிக்க வைத்தாலும்-----------
அதற்குப் பிறகு ஒவ்வொன்றாக நடந்தவை சர்மிளாவின் நினைவுகளில் ஓட, ஒரு கணம் அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இயலாமையா ஆக்ரோஷமா தெரியவில்லை. தன்மீது பச்சாத்தாபமும் இயற்கையின் மீது சீற்றமுமாய் குழம்பினாள்.
`இனியென்ன? என்ரை கையிலை ஏதும் இருக்கே? நாளைக்கு டொக்டரிட்டைப் போனால் அவர் பாத்திட்டு mamography செய்ய ஸ்பெசலிஷ்ற்ரிட்டை அனுப்புவார். அவர் mamography செய்து போட்டு "பயப்படவேண்டாம். ஓரு கட்டி இருக்குதுதான். ஆனால் பயப்படத் தேவையில்லை. எதுக்கும் நாலு நாளிலை டொக்டரிட்டைப் போங்கோ. ரிப்போர்ட் அனுப்பிவிடுறன்." எண்டுவார்.
நாலு நாளிலை டொக்டரிட்டைப் போனால் அவர் சொல்லுவார் "பயப்படாதைங்கோ.ஓரு கட்டி இருக்குதுதான். அது சும்மா tumor ஆத்தான் இருக்கும். பயங்கரமா ஓண்டும் இருக்காது. அதை வெட்டி எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சிடும்." என்று.
அவரே மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து அந்தக் கட்டியை வெட்டி எடுக்கிறதுக்கான நாளையும் குறிச்சுத் தருவார்.
பிறகென்ன! மருத்துவமனைக்கு இரண்டுநாள் முந்தியே வரச்சொல்லுவினம் அந்தச் செக்கிங் இந்தச் செக்கிங் எண்டு இரத்தத்திலை இருந்து இதயம் வரை தலையிலை இருந்து கால் நுனிவரை செக் பண்ணப்படும். Chemo ஏத்துவினம். பிறகு என்னை மயக்கிப் போட்டு என்ரை மார்பகத்தை கீறி அந்தக் கட்டியை எடுத்து Heidelberg மருத்துவமனைக்கு அனுப்புவினம்.
பிறகு அது கெடுதி விளைவிக்கக் கூடிய மூர்க்கமான கட்டி எண்டு சொல்லி- மார்பகத்தை அப்பிடியே முழுசா வெட்டி எடுப்பினம். கொஞ்ச நாளிலை புற்றுநோய் வைரஸ் மற்ற மார்பகத்துக்கும் தாவீட்டுது எண்டு சொல்லி அதையும் வெட்டி எடுப்பினம்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமா வெட்டி வெட்டி- கிட்னியிலையும் தாவீட்டுது எண்டு சொல்லி------- இப்பிடித்தானே எறீனாவுக்கு எல்லாம் நடந்தது. கான்சர் கிருமிகள் அவளை அணுஅணுவாகத் தின்றபோது எப்படி எல்லாம் துடித்தாள், துவண்டாள். எத்தனை தரம் அவளை வெட்டி வெட்டித் தைத்தார்கள். அத்தனை துன்பத்தையும் அனுபவித்தவளின் உயிராவது மிஞ்சியதா? நாற்பத்திரண்டு வயதிலேயே புதைகுழியுள் போய்விட்டாளே. அன்று அவள். இன்று நானா? இது என் முறையா? எதற்காக இந்தப் பழிதீர்ப்பு?` சர்மிளாவின் நினைவுகள் விசனமாக நகர்ந்து கொண்டிருந்தன.
அவளை ஆறுதல் படுத்த யாரும் அருகிருக்கவில்லை. வேலையிடத்தில் இருக்கும் கணவனை தொலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னால் தேவலை போலிருந்தது. நினைத்த மாத்திரத்திலேயே எறீனாவின் ஒரு மார்பகம் எடுக்கப்பட்டதும், எறீனாவை விவாகரத்துச் செய்து கொண்ட எறீனாவின் கணவன் ஞாபகத்தில் வந்தான்.
கணவனுடன் தொலைபேசும் எண்ணம் அப்படியே கலைந்து போக நேரத்தைப் பார்த்தாள். அது தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டும். அழுத விழிகளுடன் அவசரமானாள்.
புற்றுநோய் கிருமிகள் அவளைத் தின்னத் தொடங்கி விட்டனவோ! இல்லையோ! புற்றுநோய் பற்றிய நினைவுகள் அவளைக் கொல்லத் தொடங்கியிருந்தன.
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு (4-10 ஒக்டோபர்2001)
Monday, July 05, 2004
எதனால்---?
அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது.
எனது எதிர்பர்ர்ப்பு மாமாவின் பிள்ளைகளுடனான சந்திப்பும் அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல் தன் தங்கையைக் கொழும்புக்குக் கூட்டிப் போன மாமாவின் மேல் இருந்தது.
"எத்தினை தரம் சொன்னனான். கொழும்பு வாழ்க்கை வேண்டாம். நீ போய் வேலையைச் செய்திட்டு லீவுக்கு வா. தங்கச்சியும் பிள்ளையளும் இங்கை இருக்கட்டும் எண்டு. கேட்டவனே?! 58 இலை வேண்டின அடி அவனுக்குக் காணாது. இப்ப என்ரை தங்கச்சியையும் அவதிப்பட வைச்சிட்டான்."
இன்று முழுக்க அப்பாவின் புறுபுறுப்பு இப்படித்தான் தொடர்கிறது.
அம்மாவுக்குக் கூட ஆத்தியடிச் சனம் எல்லாம் கொழும்பில் ஒரு வீடு, இங்கை ஆத்தியடியில் ஒரு வீடு என்று வைத்துக் கொண்டு, கொழும்பில் போய் இருந்து பிள்ளைகளை கொழும்புப் பாடசாலைகளில் படிக்க வைப்பதைப் பார்த்து நாங்களும் அப்பிடிச் செய்தாலென்ன என்ற நப்பாசை இடைக்கிடை வரும்.
அப்பாவோ "இஞ்சை பாரும் உந்த ஆசையை மட்டும் விட்டுத் தள்ளும். எங்கடை இடம் இதுதான். கொழும்பிலை இருக்கிற ஆக்கள் பாரும் - ஓரு நாளைக்கு நல்லா வேண்டிக் கட்டிக் கொண்டு ஓடி வருவினம்." என்று ஒரேயடியாச் சொல்லிவிடுவார்.
தான் கொழும்பில் வேலையாய் இருக்கும் காலங்களிலும் பாடசாலை விடுமுறைக்கு மட்டும் எங்களை அங்கு கூட்டிப் போவாரே தவிர எந்தக் கட்டத்திலும் எங்களை அங்கு நிரந்தரமாக இருக்க விடமாட்டார்.
இப்படியிருக்கையில் தான் யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மாமாவுக்கு 1971 இல் தெகிவளை மருத்துவமனைக்கு மாற்றலாகியது. மாமா தனியப் போக விரும்பாது மாமி பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துப் போய் விடத் தீர்மானித்;த போதுதான் அப்பா எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். மாமா கேட்க வில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தெகிவளைக்கு மாமி பிள்ளைகளுடன் போய் விட்டார்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து அல்லும் பகலும் பழகி வளர்ந்த மச்சாள் சுகி, மச்சான் பாபு எல்லோரும் போய் விட்டதில் எனக்கும் கவலைதான்.
அவர்கள் இன்று வரப்போகிறார்கள். சும்மா இல்லை. அடி வேண்டிக் கொண்டு வருகிறார்கள். சிங்களக் காடையர்கள் இவர்களை அடித்தது மட்டுமில்லாமல் வீட்டிலும் எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளிப் போட்டார்களாம். எழுபத்தி ஏழுக் கலவரம் தெரியும்தானே. அவதிப் பட்டு அவலப் பட்டு எங்கேயோ ஒழித்து இருந்து தப்பிப் பிழைத்து வருகிறார்கள்.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பல தடவைகள் மதிலால் எட்டிப் பார்த்து விட்டேன். ஆத்தியடிச் சந்தியில் யாராவது பயணத்தால் வருவது தெரிகிறதா என்று.
கடைசியாக அவர்கள் ஒரு பாடசாலை லீவுக்கு வந்து போய் ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. அவர்கள் நின்ற அந்த ஒரு மாதமும் நல்ல பம்பல். விளையாட்டு, சிரிப்பு, கேலி, பந்தயம் என்று ஒரே கும்மாளம். அவர்கள் போறதுக்கு முதல் நாள் அவர்களுக்குக் கொடுத்து விட என்று அம்மா குசினிக்குள் பலகாரங்கள் செய்து கொண்டிருந்தா. அம்மம்மாவும் மாமியும், அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க அப்பாவும், மாமாவும் கூட இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
பெரியவர்கள் குசினிக்குள் கலகலக்க, நாங்கள் பிள்ளைகள் வீட்டின் முன் பக்கம் மல்லிகைப் பந்தலின் கீழிருந்து விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் விளையாட்டுக்கள் லு}டோ, கரம் என்று துவங்கி அது அலுக்க கெந்திப் பிடித்து விளையாடி அதுவும் களைக்க ஆளாளாக படிகளிலும் விறாந்தை நுனிகளிலுமாகக் குந்தி விட்டோம். வேர்த்து ஊத்தி சட்டைகள் தெப்பமாக நனைந்திருக்க ஆளாளுக்கு ஏதேதோவெல்லாம் கதைத்தோம். எங்கள் கதைகள் எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் கடவுள் நம்பிக்கை பற்றிய கதையில் வந்து நின்றது. கடவுள் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் பல விதமாக வாதம் பண்ணினோம்.
மாமாவின் மகன் பாபு அடிச்சு வைச்சுச் சொல்லி விட்டான்.
"கடவுளும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நான் உதுகளை ஒரு நாளும் நம்பவே மாட்டன்." என்று.
என்னுடைய தம்பி பாலுவால் அவனுடைய நாஸ்திகத் தனத்தை ஆமோதிக்க முடியவில்லை.
"என்ன நீ இப்பிடிச் சொல்லுறாய். எங்கடை ஆத்தியடிப் பிள்ளையாரிலை கூட உனக்கு நம்பிக்கையில்லையே?!" ஆச்சரியமாகக் கேட்டான்.
பாபு "இல்லை" என்று திடமாகப் பதிலளித்தான்.
"உனக்கு உள்ளுக்கை நம்பிக்கை இருக்கு . வெளீலை சும்மா லெவலுக்கு கடவுள் இல்லை எண்டுறாய்." என்று மறுதலித்தான் பாலு.
"எனக்கு நம்பிக்கை இல்லையெண்டுறன். கடவுளே இல்லாத போது ஏன் நான் நம்ப வேண்டும்."
பாபு அறுத்துறுத்துச் சொன்னான்.
இப்படியே பாலுவுக்கும் பாபுவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டு பந்தயம் வரை வந்து விட்டது.
பாபு தனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்க ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரின் மேல் துப்பிவிட்டு வருவதாகத் தீர்மானிக்கப் பட்டு, எங்கள் சம்பாஷணை இடை நிறுத்தப்பட்டுது.
அவர்கள் பிள்ளையார் கோவில் வரை போக ஆயத்தமானார்கள். எனக்கும் போக ஆசைதான். நான் வளர்ந்த பெண் பிள்ளை என்பதால் பாடசாலை தவிர்ந்த நேரத்தில் அம்மாவைக் கேளாது வெளியில் போகத் துணிவு வரவில்லை. எனது சின்னத் தம்பிமாரும் தங்கைமாரும் மட்டும் அவர்களுடன் சேர்ந்து போனார்கள். நான் கேற் வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
எனது அரை மணி நேரக் காத்திருப்பின் பின் அவர்கள் திரும்பி வந்தார்கள். என்னுடைய முழு நம்பிக்கையும் பாபு சும்மா சொல்லியிருப்பான். ஆனால் கடைசி மட்டும் பிள்ளையாரின் மேல் துப்பியிருக்க மாட்டான் என்பதே.
அந்த நம்பிக்கையுடன் சிரித்த படி
"என்ன பாலு பந்தயத்திலை கோபுப்பிள்ளை தோத்திட்டாரே?" கேட்டேன்.
"இல்லை நான் தான் தோத்திட்டன்."
பாலுவின் குரலில் பந்தயக் காசு கொடுக்க வேண்டுமே என்ற கவலை தெரிந்தது.
"உண்மையா பிள்ளையாருக்கு மேலை துப்பினவனே?"
நம்ப முடியாததால் சந்தேகத்துடன் மீண்டும் நான் கேட்டேன்.
"ம்..கும்--- கதவு பூட்டியிருந்தது. அதாலை பிள்ளையாருக்கு நேரே இருக்கிற தலை வாசல் கதவை காலாலை உதைஞ்சு போட்டு, பிறகு கதவிலை துப்பியும் போட்டு வந்தவன்." பாலு கொஞ்சம் அசாதாரணமாகத்தான் சொன்னான்.
"நான் நம்பமாட்டன். எந்தக் காலாலை உதைஞ்சவன்?"
என்னிடம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தீர்க்கமான எந்த முடிவும் இல்லையென்றாலும், கடவுள் இல்லையென்று சொல்லி எங்கள் ஊர் பிள்ளையாரை அவமதிக்க ஒரு போதும் சம்மதமில்லை. அதனால்தானோ என்னவோ என் குரலும் அசாதாராணமாகவே ஒலித்தது.
பாபு வலது காலைத்தூக்கி எங்கள் மதிலை உதைந்து காட்டி,
"இப்பிடித்தான் இந்தக் காலாலைதான் உதைஞ்சனான் மச்சாள்." என்றான்.
எனக்கு நம்ப முடியவில்லை. தம்பி பாலு பந்தயக்காசு கொடுக்க வேண்டுமென்று அம்மாவிடம் ஒரு ரூபாவுக்குக் கெஞ்சிய போது கூட இரண்டு பேரும் நடிக்கிறாங்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.
"உண்மையா உதைஞ்சவன் அக்கா." தம்பி என்ரை கையில் அடித்து சத்தியம் பண்ணிய போது தான் நம்பினேன். அதற்குப் பிறகு அன்றைய பொழுது எனக்கு என்னவோ போலவே இருந்தது.
அடுத்த நாள் மாமா குடும்பம் பயணமாகி விட்டது. வழமை போல் அவர்கள் பயணமான அன்றைய நாள், எங்கள் வீடு வெறிச்சோடிப் போனது போல் அமைதியாக இருந்தது. அடுத்த நாள் மீண்டும் நானும் தம்பியும் தனியாக கரம் அது இது என்று விளையாடத் தொடங்கி விட்டோம். ஆனால் பாபு செய்த வேலையை மட்டும் மறக்காமல் அடிக்கடி நினைத்தோம் அவன் அப்பிடிச் செய்திருக்கக் கூடாது என்று பலமுறை கதைத்தோம்.
இன்றும் அந்த நினைவு என் மனத்திரையில் பல முறை முகம் காட்டி விட்டது.
பாபுவின் பிடிவாதமான முகத்தை நினைத்த படியே மீண்டும் மதிலால் எட்டிப் பார்த்தேன்.
"வாவ்------!" மக்கள் வெள்ளம். எனக்குள் சந்தோஷம் மின்னலிட்டது.
அப்பாவின் முகத்திலும் சந்தோஷம். ஆனால் அது ஒரு இனம்புரியாத கோபமும் சோகமும் கலந்த சந்தோஷம்.
நான் ஓடிப்போய் கேற்றைத் திறந்து மனித வெள்ளத்தை முழுமையாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் களைப்பு. நடைகளில் தளர்வு.
எல்லோரும் எமது ஊர்க்காரர்கள்தான். அப்பா விழுந்து விழுந்து எல்லோரையும் விசாரித்தார்.
"அநுராதபுரம் மாதிரி கொழும்பிலை அடி விழேல்லைத் தம்பி. சில சில இடங்களிலைதான் சிங்களக் காடையன்கள் இருக்கிறாங்களே. அவங்கள் தங்கடை வேலையைக் காட்டிப் போட்டாங்கள். எனக்குத்தான் காங்கேசன் துறையிலை வந்து இறங்கு மட்டும் ஒரே சத்தி. எனக்கு இந்தக் கப்பல் பயணம் ஒத்து வராது தம்பி."
சுந்தரிப்பாட்டி இழுத்து இழுத்து சொல்லிக் கொண்டு போனா.
"அப்ப தங்கச்சியவையளும் உங்கடை கப்பலிலேயே வந்தவை?"
அப்பா அவசரமாய் கேட்டார்.
"ஓமடா தம்பி. அங்கை பின்னுக்குப் பார். வந்து கொண்டிருப்பினம்."
சுந்தரிப்பாட்டி சொல்லி வாய் மூடவில்லை.
தூரத்தில் வரும் மாமா என் கண்களுக்குள் அகப்பட்டு விட்டார். பக்கத்தில் கொஞ்சம் பின்னால் மாமி மிக மெதுவாக நடந்து கொண்டு வந்தா.
அது யார் நொண்டியபடி, காலை இழுத்து இழுத்து ----- ? வடிவாகப் பார்த்தேன்.
அட அது பாபு. ஏன் இவன் நொண்டுறான்? ஏதும் விழுந்து கிழுந்து போட்டானோ? நான் யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.
அப்பா நிம்மதிப் பெரு மூச்சோடு அவர்களை உள்ளே அழைத்தபடி
"இவன் பாபு ஏன் கிழவங்கள் மாதிரி காலை இழுத்திழுத்து நடக்கிறான். என்ன நடந்தது இவனுக்கு?" மாமியைக் கேட்டார்.
"அதையேன் அண்ணை கேக்கிறிங்கள்? பள்ளிக்கூடத்திலை புற்போல் (Football) விளையாடக்கை முழங்காலுக்கை முறிஞ்சு போட்டுதாம். உடனையே பிரின்சிப்பல் (Principle) ரெலிபோன் பண்ணிக் கூப்பிட்டவர். இவர் போய் ரக்ஸி (Taxi) பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவர். எல்லாம் உடனையே கவனிச்சு ஒப்பிரேசன் எல்லாம் செய்தும் போட்டாங்கள். பிறகுதான் கண்டுபிடிச்சாங்கள். எலும்பு சரியாப் பொருந்தேல்லையெண்டு. திருப்ப ஒப்பிரேசன் செய்யிறதுக்கெண்டு நாளெல்லாம் குறிச்சிருக்கக்கைதான் இந்தப் பிரச்சனையெல்லாம் வந்திட்டுது. டொக்டேர்ஸ்(Doctors) எல்லாரும் ஸ்றைக்(strike) பண்ணீட்டினம். ஒண்டும் செய்யேலாமல் போட்டுது. எல்லாரும் இவற்றை ப்ரெண்ட்ஸ் (Friends)தான். இவருக்காண்டியாவது வந்து செய்யிறம் எண்டு சிலர் சொன்னவைதான். ஆனால் ஸ்றைக்(Strike) எண்ட படியால் ஆஸ்பத்திரியிலை ஒப்பரேசன் செய்யக் கூடிய நிலைமையளும் இருக்கேல்லை. இதைப் பாத்துக் கொண்டு நிண்டு உயிரையே குடுக்க வேண்டி வந்திடும் எண்டு வெளிக்கிட்டிட்டம். அவனுக்குத்தான் எங்களிலை கோவம். நிண்டு ஒப்பிரேசனை முடிச்சிட்டு வெளிக்கிட்டிருக்கலாம் எண்டு வழியெல்லாம் ஒரே புறுபுறுப்பு."
மாமி சொல்லி முடித்ததும், "அப்ப இனி என்ன நடக்கும்?" அப்பா அக்கறையுடன் வினவினார்.
"என்ன... எலும்பை பொருத்திறதெண்டு சொல்லி ஒரு எலும்புக்கு மேலை ஒரு எலும்பை வைச்சு தங்கடை வேலையை முடிச்சிட்டாங்கள்.
இப்ப எனக்கு இந்த வலது கால் இடது காலை விட நீளத்திலை ஒரு இஞ்சி குறைஞ்சிட்டுது. ஓப்பரேசன் செய்யிறதெண்டால் உடனையே செய்யோணுமாம். நாள் போனால் ஒண்டுமே செய்யேலாதாம். அம்மாக்கும் அப்பாக்கும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். கேட்கேல்லை. என்னை இங்கை இழுத்துக் கொண்டு வந்திட்டினம். இனி என்ன? இப்பிடியே வாழ்நாள் பூரா கிழவன்கள் மாதிரி நான் காலை இழுத்து இழுத்து நடக்க வேண்டியதுதான்.
கப்பலுக்குள்ளை கூட சாப்பாடு குடுத்த ஆக்கள் என்னைப் பின் பக்கமாப் பார்த்திட்டு, ஒரு சின்னப் பெடியனைக் கூப்பிட்டு, அந்தக் கிழவனுக்கு இந்தப் பாணைக்குடு - எண்டு சொன்னாங்கள். நானொண்டும் கிழவனில்லை. எனக்கு இப்பதான் பதின்னாலு வயசு எண்டு கத்தோணும் போலை இருந்திச்சு."
பாபு மிகவும் சலிப்பும் வேதனையும் இழைந்தோடச் சொன்னான்.
எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
பாலு என்ன நினைத்தானோ, விரைந்து பாபுவின் அருகில் சென்று
"நீ பிள்ளையாருக்கு உதைஞ்சதுக்குப் பாத்தியோ கிடைச்சிட்டு."
என்றான்.
"காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை சொல்லாதை."
பாபு - அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்பதை வலியுறுத்தினான்.
நான் ஓன்றுமே சொல்லவில்லை. ஆனால் பாபு இன்று வரை வலது காலை விட ஒரு இஞ்சி நீண்ட இடது காலை மெதுவாக இழுத்து இழுத்துத்தான் நடக்கிறான்?
அது எதனால்? எனக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - பூவரசு (செப்டெம்பர்-ஒக்டோபர்-2002)

எங்கே தவறு?
பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும், மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள். ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள் தன்னை முழுமையாக அடக்க முடியவில்லை. கோப்பை அவளைத் தாண்டிச் சுவரில் மோதி, அவள் ஆசை ஆசையாகச் சமைத்த சாப்பாடுகள் நிலத்தில் சிதறின. ஏற்கனவே படபடத்த அவளது நெஞ்சு, கோப்பை உடைந்த சத்தத்தில் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் வெடவெடத்தன.
"உனக்குப் புருஷன் வீட்டாரோடை சரியான முறையில் பழகத் தெரியாது."
சாப்பாட்டை நிலத்தில் விதைத்ததோடு திருப்பிப்படாத மகேசன் அவளை அடிப்பதற்காக கோபாவேசத்துடன் நெருங்கினான்.
அந்தச் சிறிய சமையலறைக்குள் ஒடுங்கி நிற்கும் அவளுக்கு, தன்னை எப்படிக் காத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பயத்தில் வீரிட்டாள். அந்தச் சத்தத்தில் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த கண்ணன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூர்க்கத்தனத்துடன் மதுமிதாவை நோக்கி விரையும் மகேசனை கட்டிப் பிடித்து மறித்தான். ஒரு நொடிப்பொழுது பிந்தியிருந்தாலும் கர்ப்பிணியான மதுவின் உடலின் ஏதோ ஒரு பகுதியை மகேசனின் மூர்க்கத்தனம் பதம் பார்த்திருக்கும். மதுவின் கண்கள் கண்ணனுக்கு நன்றி கூறின.
"என்ன மகேசண்ணை நீங்கள்........! உங்களுக்கு மதுவை அடிக்க மனம் வருதே? ஏன் இப்பிடி அவளைக் கொடுமைப் படுத்துறீங்கள்? அவள் உங்கடை தம்பி பெண்சாதியெண்டதை மறந்திட்டீங்களோ?"
கண்ணன் வேதனை இழைந்தோட வினவினான்.
"நீ என்னடா கதைக்கிறாய். அவளுக்கு நான் அவளின்ரை புருஷன்ரை அண்ணன் எண்டதே மறந்து போச்சு. நீ அதுக்குள்ளை வந்திட்டாய்." சீறினான் மகேசன்.
மகேசனின் சீற்றம் மதுவை இன்னும் பயமுறுத்த அவள் கண்ணனின் பின் ஒளிந்து கொண்டாள்.
"என்னடி அவனுக்குப் பின்னாலை ஒளியிறாய்? அவன் என்ன உனக்குப் புருஷனோடீ?"
அவனது அநாகரிகமான பேச்சைக் கேட்க விரும்பாமல் மது தனது அறைக்குள் ஓடிச் சென்று கட்டிலில் வீழ்ந்து அழுதாள்.
"ஏன் எனக்கு இந்தக் கொடுமை. இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் இந்த அவஸ்தைகளை நான் தாங்கோணும்!"
மனசுக்குள் வேதனை பொங்கக் கண்ணீரைச் சொரிந்தாள்.
இன்று அவளது முதலாவது திருமணநாள். அதைக் கொண்டாடத்தான் அவள் ஸ்பெஷல் சமையல் செய்திருந்தாள்.
அவளது அக்கா சுபேதாவும், அத்தான் மகேசனுமாகத்தான் அவளை மகேசனின் தம்பி சபேசனுக்கு மனைவியாக்க இங்கு யேர்மனிக்குக் கூப்பிட்டார்கள்.
"கொம்பியூட்டர் கோர்ஸ் செய்கிறேன். வரமாட்டேன்." என்று மது மறுத்துத்தான் பார்த்தாள். சுவேதாதான் போனுக்கு மேல் போனாக எடுத்து ஊரிலிருந்து அம்மா சகோதரர்கள் படும் கஷ்டங்களைக் காரணங்களாக்கி யேர்மனிக்கு மதுவை வரச் செய்தாள்.
வந்து ஹோல் எடுத்து, தாலி கட்டி திருமதி. சபேசன் ஆகும் வரையிலான அந்த மூன்று மாதங்களும், மது சிட்டுப் போல் சிறகடித்துப் பறந்து திரிந்தாள். சபேசனின் கடைக் கண் பார்வையில் களித்திருந்தாள்.
கூட்டுக் குடும்பமாய் சுவேதா மகேசன் ஒரு அறையிலும், மது சபேசன் இன்னொரு அறையிலும், சபேசனின் நண்பன் கண்ணன் இன்னும் ஒரு அறையிலுமாக அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே, மகேசனின் நடவடிக்கையில் ஏதோ தப்பிருப்பதை மது உணர்ந்து கொண்டாள்.
குளித்துக் கொண்டிருக்கையில் திறப்புத் துவாரத்தில் நிழலாடுவதும், உடை மாற்றிக் கொண்டிருக்கையில், எதேச்சையாக உள்ளே நுழைவது போல் மகேசன் அவள் அறையில் நுழைவதும், எதேச்சையான விடயங்கள் தான் என்று மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் சந்தோசமான குடும்பத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் துணிவின்றி, மௌனித்திருந்து மனதுக்குள் சஞ்சலப்பட்டாள்.
சுவேதா வேலைக்குப் போகும் நேரத்தில் தனது வேலை நேரத்தை மாற்றி மகேசன் வீட்டில் நிற்கத் தொடங்கியதுமல்லாமல் "ரீ போட்டுத் தா. பக்கத்திலை இருந்து சாப்பாடு போட்டுத்தா. என்னோடை கதை......." என்று தொல்லைப் படுத்தவும், அவள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் அவளை மூர்க்கமாகத் தாக்க முற்படவும் தொடங்கிய போதுதான், அவள் துணுக்குற்று, சபேசனிடம் "உங்கள் அண்ணனின் நடவடிக்கை சரியில்லை" என்று முறையிட்டாள்.
முதலில் புரியாது விழித்த சபேசன், என்ன சொல்கிறாள் என்று புரிந்ததும் "என்ரை அண்ணனை எனக்குத் தெரியும். நாங்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த குடும்பம். இப்பிடியான கதையளைச் சொல்லி எங்களைப் பிரிக்கலாம் எண்டு மட்டும் நினைக்காதை." புழுவைப் போல மதுவைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.
வெகுண்ட மதுவின் மனதுள் அன்றுதான் சபேசனிலிருந்த காதல் மயக்கம் மெதுமெதுவாய் கரையத் தொடங்கியது. `மனைவி நான் சொல்லுறன். நம்ப மறுக்கிறானே!` என்று சினப்பட்டாள்.
குழந்தை பிறந்ததும் மகிழ்வில் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும், மகேசனின் அருவருப்பான லீலைகளில் வாழ்க்கையையே வெறுத்தாள். தனிக்குடித்தனம் போய் விடுவோம் என்று சபேசனிடம் மன்றாடிப் பார்த்தாள். பலனில்லாது போக, அக்கா சுபேதாவிடம் தனது அவஸ்தைகள் பற்றிச் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள்.
"உனக்கு அடக்க ஒடுக்கம் இல்லை. பெரியாக்களை மதிக்கிற குணமும் இல்லை. அவரே உன்ரை அடங்காப்பிடாரித் தனத்தைப் பற்றி என்னட்டைச் சொல்லிப் பேசினவர். நீ அடங்காமல் வாழுற ஆசையிலை, சாமிப் போக்கிலை வாழுற அவரையே நாக்கூசாமல் குறை கூற நினைக்கிறாய். இப்பிடி ஒரு தங்கைச்சி கிடைச்சதை நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்கு."
சுவேதா சீறிய சீறலில் மது அடங்கிப் போனாள். ஒடுங்கிப் போனாள். அனாதையாக உணர்ந்தாள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வீட்டுக்குள் நடக்கும் அநியாயங்களை மென்று விழுங்கினாள்.
மகேசனுக்கு இது நல்ல வசதியாகப் போய்விட்டது. பகல் வேலையையே விட்டு விட்டு இரவில் வேலை செய்யத் தொடங்கினான். பகலில் இவளின் அழகிய மேனியைத் தொடுவதிலும், உரசுவதிலும் கண்ணாயிருந்தான். மறைமுகமாகக் கட்டிலுக்குக் கூட அழைத்துப் பார்த்தான். அவள் மறுக்கும் நேரமெல்லாம் மூர்க்கம் பிடித்தவனாய் அவளை அடிக்கவும் உதைக்கவும் முயற்சித்தான்.
இப்படியான சமயங்களில்தான் கண்ணன் இவர்கள் விடயத்தில் தலையிடத் தொடங்கினான்.
இந்த நரக வாழ்க்கையின் நான்கு வருட ஓட்டத்தில் மது இரண்டாவது குழந்தையையும் பெற்றிருந்தாள். தனிமைப் படும் நேரத்திலெல்லாம், தன்னைக் காத்துக் கொள்ள மதுவே கண்ணனை அழைக்கத் தொடங்கியுமிருந்தாள்.
அண்ணன் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் சபேசனோ, கணவன் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் சுபேதாவோ தராத பாதுகாப்பை, கண்ணன் தந்ததில் கண்ணன் மீது தன்னையறியாமலே பாசமாகிப் போனாள்.
மகேசன் "அவன் உன்ரை புருசனோ...?" என்று கேட்கிற ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்கு கண்ணனிடமான மன நெருக்கம் இறுக்கமாகிக் கொண்டே போனது.
அந்த மனநெருக்கம் தப்பென்று தெரிந்தும், தப்பிக்க முடியாமல் மது தடுமாறினாள். கட்டிய கணவன் பக்கத்தில் கட்டிலில் தூங்கிய போதும், மனம் துப்புக் கெட்டு பக்கத்து ரூம் கண்ணனைத் தொட்டுத் தொட்டு வருவதைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.
நான் என்ன கெட்டவளா? ஏன் இப்படியானேன்? தன்னையே கேள்விகளால் துளைத்தாள்.
- சபேசன் என் கணவன்தான். ஆனாலும் காதலிக்க முடியவில்லையே. வெறுப்பில்லா விட்டாலும் மனதால் விரும்ப முடியவில்லையே! ஏன் இப்படியானது? இவனுடனான நான்கு வருட வாழ்க்கை கசந்து விட்டதா? அல்லது கசக்க வைத்தானா?
பருந்தாகத் திரியும் இவன் அண்ணன் முன் நான் கோழிக்குஞ்சாய் நடுங்குவதைக் கூடக் கண்டு கொள்ளத் தெரியாத இவனை என்னால் கணவனாகவே கருத முடியவில்லையே! - தானே தனக்குப் பதிலும் சொன்னாள்.
இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், மது நினைவுகளால் கண்ணனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.
ஒரு பிற்குறிப்பு
-------------------------
ஐந்து வருடங்களின் பின் கலாச்சாரமும் பண்பாடும் தன் கழுத்தை நெரித்து விடப் போகிறதே என்ற பயத்தில், குடல் தெறிக்க ஓடிய மது, வேகமாக வந்த ரெயின் ஒன்றில் மோதி, யேர்மனிய நகரமொன்றின் தண்டவாளங்களில் இரத்தமும் சதையுமாகச் சிதைந்து போனாள்.
அவளைக் கூட்டி அள்ளி.................!
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு (30 செப்டெம்பர் - 06 ஒக்டோபர் 1999)

இவர்களென்ன மார்க்கண்டேயர்களா.....?
சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தனை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள்.
அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம்.
மாப்பிள்ளை யேர்மனியாம். அப்ப அவருக்கு முப்பத்தெட்டு வயசு. சங்கவியை விட பதின்மூன்று வயசு கூட எண்டாலும் பரவாயில்லை. சீதனம் ஒண்டும் வேண்டாம் எண்டெல்லே சொல்லியிருக்கிறார். இனி இதுக்குள்ளை வயசைப் பார்த்துக் கொண்டிருக்கேலுமே!
போதாதற்கு சங்கவிக்குப் பின்னாலை 23, 20, 16 எண்டு மூண்டு குமருகள் எல்லோ காத்துக் கொண்டு நிக்குதுகள்.
அதுதான் மாப்பிள்ளைக்கு தலை முன்பக்கத்தாலை வெளிச்சுப் போனதைப் பற்றிக் கூட ஒருத்தரும் அக்கறைப் படேல்லை.
இந்த விசயத்திலை சங்கவி கோயில் மாடு மாதிரித்தான். பெரியாக்கள் எல்லாருமாப் பேசித் தீர்மானிச்சிட்டினம். அவள் தலையை ஆட்ட வேண்டியது தான் பாக்கி இருந்தது. அவளுக்கு வேறை வழியில்லை. ஆட்டீட்டாள்.
என்ன........! அம்மா கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் எண்டு எல்லாச் சஞ்சிகைகளையும் வேண்டிப் படிச்சதோடை விடாமல், அதிலை வந்த தொடர்கதைகள் எல்லாத்தையும் சேர்த்துக் கட்டி வைச்சிருந்தவள். அந்தப் புத்தகங்களுக்கை இருந்த பொன்னியின் செல்வன், ராஜமுத்திரை போன்ற அரச கதையளை எல்லாம் வாசிச்சு வாசிச்சு, அதிலை வாற ராஜகுமாரர்களைப் போலவும் இளவரசர்களைப் போலவும் தனக்குள்ளை ஒரு இலட்சிய புருசனை வரித்து வைத்திருந்தவளுக்கு, இப்ப கறுப்பா, கட்டையா வழுக்கைத் தலையோடை ஒருவன் வரப் போறான். ஆனால் வெளிநாட்டிலை இருந்து வரப் போறான்.
கதைகளில் வந்த மாநிறமான வீரபுருசர்களைக் கற்பனையில் கண்ட சங்கவிக்கு யேர்மனிய மாப்பிள்ளைதான் இனி தன் புருசன் என்பதை மனதில் பதிய வைக்கச் சில காலங்கள் தேவைப்பட்டது.
அது பல காலங்கள் ஆகியிருந்தால் கூட ஒன்றும் ஆகியிருக்காது. ஏனெண்டால் நியம் பார்க்காமல், புகைப் படம் பார்த்து, இரண்டு வருச கடிதக் குடித்தனத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளையைத் தூக்கி ஜெயில்லை போட்டுட்டாங்களாம். என்ன - அவர் ஒண்டும் பெரிய பிழை விடேல்லையாம். தூள் வித்தவராம். கறிக்குப் போடுற தூள் இல்லை. மற்றது.
யேர்மன் சட்டதிட்டங்களும் பொலிஸ் கெடுபிடியளும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மாப்பிள்ளையோடை சேர்ந்து இன்னும் நாலுபேராம். சங்கவி ராஜகுமாரர்களை யெல்லாம் களைந்து விட்டு யேர்மன் மாப்பிள்ளையை மனசுக்குள் குடி வைச்ச பிறகுதான் இந்தப் பிரச்சனை வந்ததெண்ட படியால், பிறகு யேர்மன் மாப்பிள்ளையையும் மனசிலிருந்து களைந்தெறிய சங்கவிக்குத் துணிவு வரேல்லை.
இனி என்ன செய்யிறது! கிறிமினல் குற்றவாளி என்ற பட்டப் பெயரோடை வெளியிலை வரப்போகும் மாப்பிள்ளைக்காண்டி இன்னும் ஐந்து வருசம் காத்திருக்க வேண்டி வந்தது.
இதுவே இப்ப எண்டால் மாப்பிள்ளையை நேரே கொண்டு போய் நாட்டிலை இறக்கி விட்டிருப்பாங்கள். அந்த நேரம் அந்தக் கடும் சட்டம் வராத படியால் மாப்பிள்ளையாலை யேர்மனியிலையே இருக்க முடிஞ்சுது.
சங்கவி காத்திருந்தாள். மனசு ஒண்டையே சுத்திச் சுத்திக் காத்துக் கொண்டிருக்க வயசு மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் ஓடி 32 ஐத் தொட்டு விட்டது.
ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு திருமணத்துக்காக சிங்கப்பூரை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாக இன்னும் 3 வருசங்கள் தேவைப்பட்டுது.
அதிலையென்ன வந்தது இப்ப..? சங்கவி 35 ஐத் தொட்டு விட்டாள் அவ்வளவுதான். மனசு மட்டும் இன்னும் 25 போல் மிகவும் இளமையாய் கனவுகளுடன் காத்திருந்தது.
மாப்பிள்ளை எல்லாச் செலவையும் பார்க்கிறார் எண்டுதான் பேச்சு. ஆனால் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு வாறதுக்கு இடையிலை சங்கவின்ரை அம்மாவுக்குத்தான் கொஞ்ச ஆயிரங்கள் செலவழிஞ்சிட்டுது.
எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தால் இன்னும் கூடப் போயிருக்கும். தனிய சங்கவியின்ரை 16 வயசுத் தங்கைச்சி பார்கவியையும் - அவளுக்கு இப்ப 26 ஆச்சு - அப்பா இல்லாத படியால் துணைக்கு மாமாவையும் தான் கூட்டிக் கொண்டு வந்தவள். அப்பா கடைசித் தங்கைச்சிக்கு 10 வயசா இருக்கக்கையே மாடு மிரிச்சுச் செத்திட்டார்.
சங்கவிக்கு காசெல்லாம் செலவழியுது எண்டு கொஞ்சம் அந்தரமாத்தான் இருக்குது. ஆனால் கல்யாணக் கனவுக்கு முன்னாலை அது சிம்பிள்தான். சிங்கப்பூருக்கு வந்து இரண்டு கிழமை பறந்தோடிட்டு. நல்ல காலமா சிங்கப்பூரிலை சங்கவியின்ரை தூரத்து உறவு மாமா குடும்பத்தோடை இருந்ததாலை ஹொட்டேல் செலவு இல்லாமல் தங்க வழி கிடைச்சிட்டு. மாப்பிள்ளை ஹொட்டேல் செலவை தான் பார்க்கிறன் என்று ஹொட்டேல்லை தங்கச் சொன்னவர். அவரும் எவ்வளவுக் கெண்டு தாறது. அவர் அங்கையிருந்து வந்தாப் பிறகு - இவ்வளவு நாளும் ஹொட்டேல்லை இருந்து சாப்பிட்ட காசைத் தாங்கோ எண்டு - கேக்கேலுமே..!
சங்கவிக்கு சிங்கப்பூரிலை ஒண்டும் தெரியாது. சின்னப் பிள்ளையா இருக்கேக்கை அப்பாவோடை போய்ப் பார்த்த ஒரு கறுப்பு வெள்ளை சினிமாப் படத்தின்ரை பெயர் மட்டும் ரங்கூன்ராதா என்று நல்ல நினைவாய் இருக்கு. அவ்வளவுதான் அவளுக்கு தான் இப்ப தங்கியிருக்கிற ரங்கூனைப் பற்றியும் தெரியும். அதுக்கு மேலையெல்லாம் அறியோணும் எண்ட ஆர்வம் கூட பெரிசாய் இல்லாமல், வரப்போற மாப்பிள்ளையையே மனசு வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
மீண்டும் மீண்டும் அரச கதைக் கதாநாயகர்கள் நினைவில் வந்து போனார்கள். கச்சை கட்டிய ராஜகுமாரிகளைப் போல் தன்னைக் கற்பனை செய்து கொண்டாள். அரண்மனைக்குச் சொந்தமான நீச்சல் தடாகத்தில் தான் குளித்துக் கொண்டிருக்க குதிரையில் வந்த மாப்பிள்ளை......... தன் அழகைக் கள்ளமாக ரசிப்பது போல.......... சங்கவிக்குக் கன்னம் எல்லாம் சிவந்து........ தனக்குள் தானே நாணி......!
குளித்து சேலை உடுத்தி முகத்தை நேர்த்தியாக்கி விட்டு நேரத்தைப் பார்த்தாள். இன்னும் மூன்று மணித்தியாலங்கள். - சே...... இந்த நேரம்....... ஏன் இப்படி நத்தை மாதிரி நகருது. - காத்திருப்பது சுகமானதுதான். ஆனால் எத்தனையோ வருசமாக் காத்திருக்கிறபோது தோன்றாத அவஸ்தை இறுதி நாளில் தோன்றுவது விசித்திரம்தான். நேற்றிரவிலிருந்து சங்கவிக்குள் இன்னவென்று சொல்ல முடியாத போராட்டம். இன்னும் காத்திருக்க வேணுமா..! என்ற ஏக்கம். மணித்தியாலங்களை எண்ணி எண்ணி இன்னும் இத்தனை மணித்தியாலங்கள் காக்க வேணுமே..! என்ற மலைப்பு.
மாப்பிள்ளையின் சொந்தங்கள் - அக்காமார், அண்ணாமார் எல்லாரும் சுவிஸ் யேர்மனி பரிஸ் என்று பரந்திருக்கிறார்கள். அவர்களும் எல்லாரும் இன்று சிங்கப்பூர் வந்து - சங்கவியைப் பார்க்கச் சேர்ந்து வருவதாகத்தான் திட்டம்.
சங்கவி பொறுமையிழந்து மீண்டும் நேரத்தைப் பார்த்தாள். குறிப்பிட்ட நேரம் தாண்டி விட்டது. அம்மா, தங்கைச்சி பார்கவி, மாமா எல்லாரும் கூட குளித்து வெளிக்கிட்டு மாப்பிள்ளையை வரவேற்க ரெடியாக இருந்தார்கள்.
ஆ........வந்து விட்டார்கள். சங்கவியின் கால்கள் பின்னிப் பிணைந்து தடுமாறி..... முடியவில்லை அவளால்..... ஓடி விட்டாள் அறைக்குள்.
உள்ளிருந்து திறப்புத் துவாரத்தினூடாக வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். - எங்கை மாப்பிள்ளையைக் காணேல்லை. இவர் எங்கை போட்டார்..? வரேல்லையோ..? - மனசு பட படத்தது. இதயம் அடித்துக் கொண்டது. வண்ண வண்ணச் சேலையில் பெண்கள், சிட்டுக்களாய் குழந்தைகள்..... - இவர் மட்டும் எங்கே......? -
சங்கவீ......! வெளீலை வா. அம்மா கூப்பிட்டா. சங்கவி மெல்லிய ஏமாற்றத்துடன் வெளியில் வந்தாள். எல்லோரது பார்வையும் சங்கவி மீது மேய்ந்து பின் பார்கவி மீது பாய்ந்தன. சங்கவியின் கண்களோ மாப்பிள்ளையைத் தேடியது. - ம்..கும்..... காணவில்லை. எங்கை அவர் வரேல்லையோ....? - வெட்கத்தை விட்டுக் கேட்டு விட்டாள்.
எல்லோர் பார்வையும் ஒருமித்து அவர் பக்கம்... அதுதான் கொல் கொல்லென்று இருமிக் கொண்டிருந்த ஒருவர் பக்கம் திரும்பியது. - இவர்தானா அவர்..! - சங்கவியால் நம்ப முடியவில்லை. கற்பனைச் சிறகுகள் ஒரு கணம் விரிய மறுத்தன. ஒரு கணம்தான். சுதாரித்துக் கொண்டாள்.
- 38வயது மாப்பிள்ளையும் பத்து வருசத்திலை 48வயசைத் தொட்டிருப்பார்தானே. என்ரை மரமண்டைக்குள்ளை இது ஏன் தோன்றேல்லை..? அது மட்டுமே 5வருசம் ஜெயிலுக்கை இருந்தவரில்லோ..! வருத்தம் பிடிச்சிருக்கும் தானே..! அவரும் அதுக்குப் பிறகு ஒரு போட்டோவும் அனுப்பேல்லை. ம்ம்..... ஆர் நினைச்சது....! இப்பிடிக் கேவலாமாப் போயிருப்பார் - எண்டு. மனசைச் சமாளித்தாள்.
ஒருவாறு சம்பிரதாயப் பேச்சுக்கள், சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு, அன்றைய பொழுதும் இருண்டு விட்டது. அதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஏதேதோ குசுகுசுத்தார்கள். மாப்பிள்ளையின் அக்கா கணவன் மாமாவை வெளியில் வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனார்.
திரும்பி வரும் போது மாமா பேயறைஞ்சது போல வந்தார். அவர்கள் ஹொட்டேல் புக் புண்ணியிருப்பதாகச் சொல்லிப் போய் விட்டார்கள். சங்கவி எதிர் பார்த்தது போல மாப்பிள்ளை அவளுடன் தனியாக ஒன்றுமே கதைக்கவில்லை. கடிதங்களில் கதைத்த மாப்பிள்ளை இப்போது சற்று அந்நியப் பட்டுப் போனார் போல உணர்ந்தாள். மாமா நிறையப் பேசவில்லை. கவலையாக இருந்தார்.
சங்கவிக்கு - மாப்பிள்ளை வரமுன்னம் மனசுக்குள்ளை இருந்த குழுகுழுப்பான நினைவுகள் எல்லாம் இப்ப இல்லாமல் போய் விட்டன போல ஒருவித வெறுமையாக இருந்தது. தங்கைச்சிதான் சும்மா சும்மா சீண்டிக் கொண்டிருந்தாள்.
இரவு நெடு நேரத்தின் பின் மாமா அம்மாவிடம் குசுகுசுப்பது சங்கவியின் செவிகளில் நாரசமாய் விழுந்தது.
- 35வயசு வந்த பொம்பிளையை ஆராவது கலியாணம் கட்டுவினையோ எண்டு அத்தான் காரன் கேட்டான். சங்கவின்ரை தங்கச்சியை வேணுமெண்டால் மாப்பிள்ளை கட்டுறாராம். 35 வயசான சங்கவியைக் கட்டி என்ன பிரயோசனமாம்.
சங்கவிக்கு வானம் தரையில் இடிந்து விழுவது போன்றதொரு பிரமை.
எனக்கு மட்டும்தான் வயசு ஏறியிருக்கோ.......! அவருக்கு வயசென்ன இறங்கியிருக்கோ.......! 48 வயசுக் கிழடுக்கு 26 வயசுப்பெண் தேவைப்படுதோ.......!
நாடி நரம்பெல்லாம் புடைத்து.......! கோபம் அனல் கக்கியது.
நாளைக்கு வரட்டும் கேட்கிறன். சங்கவி மனசுக்குள் கறுவிக் கொண்டாள்.
- சங்கவிக்குத்தான் வாழ்க்கை அமையேல்லை. பார்கவியாவது வாழட்டும் - என்று அம்மாவும் மாமாவுமாகத் தீர்மானித்தது அவள் காதுகளில் விழவில்லை.
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - பூவரசு - 75வது சிறப்பிதழ் ( வைகாசி-ஆனி 2002)
பிரசுரம் - திண்ணை - (March - 2004)

வசந்தம் காணா வாலிபங்கள்
அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நாலுமணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று எரிச்சலுடன் போர்வையை இழுத்தெறிந்து விட்டு தொலைபேசியை நோக்கி ஓடினான்.
இந்த அகால வேளையில் இப்படி தொலைபேசி அலறினால் அது ஊரிலிருந்து வரும் அழைப்பாகத்தான் இருக்குமென்பது அவனுக்குத் தெரியும். - வேறுயார் அப்பாவாகத்தான் இருக்கும். - மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
முன்னர் என்றால் ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பில் காசு கரைந்தாலும் அப்பாவுடன் பேசுவதில் அவனிடம் உற்சாகம் பிறக்கும். இப்போது போட்டி போட்டுக் கொண்டு பல ரெலிபோன் கார்ட்டுகள் வந்து தொலைபேசிச் செலவைக் குறைத்திருந்தாலும் அவனது உற்சாகம் முன்னரைப் போலில்லாது குறைந்து விட்டது.
ஊரில் உள்ளவர்கள் பாடு கஷ்டம்தான். அவன் இல்லையென்று சொல்லவில்லை. மாடு போல் உழைத்து........ அப்படிச் சொல்வதையும் விட அதிகமாகத் தன்னை வருத்தி, உழைத்து உழைத்து ஊருக்குத்தான் அனுப்பினான்.
பதினைந்து வருடங்களின் முன் 84 இல் அவன் யேர்மனிக்கு வந்த போது, அவன் இருபது வயது கூட நிரம்பாத அழகிய வாலிபன். வாழ்க்கையின் கனவுகள், வசந்தத்தின் தேடல்கள் எல்லாமே அவனுள்ளும் நிறைய இருந்தன.
ஆமியிடம் பிடிபட்டு பூசாவில் அடைபடவோ அல்லது அநியாயமாகச் சுடுபடவோ விரும்பாமல் அம்மா, அப்பாவின் ஆலோசனையுடன் சொந்த நாட்டை விட்டு ஓடி வந்தவன்.
வெளிநாடு - அதுவும் ஐரோப்பா - கோட், சூட்டுடன், ரையும் கட்டிக் கொண்டு......! அழகிய நினைவுகளும், இனிய கனவுகளும்......... யேர்மனியில் முகாம்களுக்குள் எட்டுப்பேரை அல்லது ஒன்பது பேரை ஒரு அறைக்குள் விட்ட போது முழுவதுமாகக் கலையாது போனாலும் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கின.
ஊருக்குக் கடிதமெழுதப் போதுமாயிருந்த பொக்கற் மணி 70டீஎம் (DM) மும், வேலையும் இல்லாது வேறு இடம் போக அனுமதியும் இல்லாது இருந்ததில் வெறெதுவும் செய்ய வழி தெரியாது பியர் கேஸ் (Bier Case) இற்கும் சிகரெட்டுக்கும் அடிமையாகிப் போன, கூட இருந்தவர்களுடன் கூட வைத்து காணாமற் போயின.
களவாய் ஸ்ரோபெரி பழம் பிடுங்கும் வேலை செய்ததில் சிறிது பணம் சேர்ந்தாலும் அழகாய் இருந்த கைகளும், சுகமாக இருந்த முதுகும் கறுக்கவும் வலிக்கவும் தொடங்கின. ஆரம்பத்தில் கறுத்துப் போன கன்னங்களையும், வெடித்துப்போன விரல்களையும் பார்த்து மனம் சிறிது வெறுத்துப் போனாலும் ஊருக்கு அனுப்பப் பணம் கிடைத்ததில் தொடர்ந்து வெலை செய்ய மனம் மறுக்கவில்லை.
முகாமில் கிடைக்கும் யேர்மன் சாப்பாட்டைச் சாப்பிட முடியாமல், ஆளுக்கு 1டீஎம் (DM) என்று முகாமிலிருந்த எல்லாத் தமிழர்களுமாய் போட்டு வாங்கிய மின்சார அடுப்பை அறைக்கு அறைமாற்றி கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்து ஹவுஸ் மைஸ்ரர் (Haus Meister) இற்குத் தெரியாமல் சமைப்பதே ஒரு சாதனையாகி, ஒரு கோழியை ஒன்பது பேர் பகிர்ந்துண்பது அதை விடப் பெரிய சாதனையாகி, கொட்டும் பனியில், குளிரின் கொடுமையில் வாழ்க்கையே வேதனையாகியதில், படிக்கும் நினைவும் ஐரோப்பிய வாழ்க்கை பற்றிய கனவும் கலைந்த போதுதான் ஆளுக்கொரு நகரமாய் அனுப்பப் பட்டார்கள்.
கோபுவுடன் இன்னொரு தமிழனையும் அனுப்பினார்கள். அவனுக்கு அந்த நகர் பிடிக்க வில்லையென்று, யாரையோ பிடித்து எப்படியோ கதைத்து கனடா போய்ச் சேர்ந்து விட்டான். முகாமை விட்டு வெளியில் வந்த சந்தோசத்தை வாய் விட்டுச் சொல்ல, ஒரு தமிழ்க்குருவி கூட இல்லாது கோபு தனித்துப் போய் விட்டான்.
தனிமையில் பேசி தனிமையில் சிரித்து வேலை செய்ய அனுமதியோ வேறு நகரம் செல்ல ஒரு விதியோ இல்லாத நிலையில் பைத்தியக்காரன் போலத் திரிந்தான். தருகின்ற 350 டீஎம் (DM) இல் - சோறையும் கோழியையும் சாப்பிட்டு விட்டு மீதியை ஊருக்கு அனுப்பினான்.
பணம் கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும், தங்கைமாரும், தம்பிமாரும், எப்படி யெல்லாம் மகிழ்வார்கள் என நினைத்துத் தனக்குள் மகிழ்ந்தான்.
- என்ரை ராசா இல்லே......... ! பாசம் பொங்க ஊரிலிருந்து வந்த கடிதங்கள் நியமாகவே பாசத்தைச் சுமந்து வந்தாலும் போகப் போக - சாமான் விலையேற்றம் கூட அனுப்பு. - என்றன.
பாசை தெரியாமல் படிகள் ஏறி - வேலை இருக்கா - என்று கேட்டதில் பேக்கரி பிற்சேரியா ரெஸ்ரோறன்ற் என்று வேலைகள் கிடைத்தன. வேலைக்கான அனுமதிப் பத்திரம் இல்லாது களவாய் வேலை என்பதால், வேலை கொடுத்தவர்களும் போதிய ஊதியம் கொடுக்க மறுத்தார்கள். வேலையை மட்டும் நன்றாக வாங்கினார்கள். ஊரிலுள்ள உறவுகளின் தேவைகள் அவனால்தான் தீர்க்கப் பட வேண்டும் என்பதால் - வேண்டாம் என்று - வேலையை விட்டுப் போகவும் வழி தெரியாது கூட்டல் கழுவல் துடைத்தல் சலாட் கழுவுதல்........ என்று எல்லாவகையான வேலைகளையும் செய்தான்.
இப்படியே வாழ்க்கை மாறி அழகிய இருபது வயது வாலிபனான கோபு குளிரிலும் பனியிலும் வேலையிலும் ஆறு வருடங்களைக் கழித்த பின்னே வேலை செய்யவும் வேறு நகரம் செல்லவும் அனுமதி கிடைத்தது.
இனியாவது வாழ்க்கை சிறப்பாகி விடுமென்ற நமஇபிக்கையில் ஓடி ஓடி வேலை தேடினான். வேறு நகரங்களுக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்தான். பாசை தெரியாத நாட்டில் படித்த படிப்புக்கோ பகட்டான வேலைக்கோ இடமில்லை என்பதை வேலை தேடிய போதும் நண்பர்களுடன் பேசிய போதும் உணர்ந்தான்.
படிக்க என்று ஆசை வந்தது. ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டிய பாரிய பிரச்சனையில் ஆசை ஆசையாகவே இருக்க களவாய் செய்த வேலைகளையே அனுமதியுடன் தொடர்ந்தான்.
ஊரில் தங்கைமார் வளர வளர, ஒரு வேலையில் கிடைத்த பணம் போதாமல் இரண்டு வேலை, மூன்று வேலை என்று தேடி வாழ்க்கை பண்த்துக்கு ஓடுவதாய் மாறிவிட்டது.
"பக்கத்து வீடு மாடியாய் எழுந்து விட்டது. நாம் மட்டும் இப்படி இருப்பது உனக்குத்தான் அழகில்லைத் தம்பி.....!"
"தங்கைச்சிக்கு ஒரு வரன் சரி வந்திருக்கு. கனடாப்பெடியன். ஆறு இலட்சம் சீதனம் கேட்கினம். இந்தியாவிலை கலியாணத்தை வைக்கோணுமாம்...... உன்ரை கையிலைதான் அவளின்ரை வாழ்க்கை தங்கியிருக்குத் தம்பி....!"
இப்படியாகத் தொடர்ந்த ஊர்க்கடிதங்கள் அவனைப் பணத்துக்காகத் துரத்தின. பஸ்சிலும் ரெயினிலும் ஓடிக் களைத்தவன் சொந்தமாகக் கார் வாங்கி ஓடி இன்னும் களைத்தான். பாசம் "பேசாதே" என்று கட்டிப் போட அலுத்தான்.
உழைத்து உழைத்து அனுப்பியவன் - முப்பதைத் தாண்டிய பின்னும் "உனக்கொரு கல்யாணம் செய்து பார்க்க எமக்காசை" என அம்மாவோ அப்பாவோ ஒரு வரி எழுதாததில் மனதுக்குள் சலித்தான்.
வாழ்க்கையின் ஆசைகளும் வசந்தத்தின் தேடல்களும் ஏக்கங்களாய் மாறின. நரையோடத் தொடங்கி விட்ட தலையில் மெல்லிய வழுக்கையும் விழத் தொடங்கியது. அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து ஆதங்கப் படும் பலநூறு ஐரோப்பியத் தமிழ் இளைஞர்களின் வரிசையில் - 35 வயதைத் தொட்டு நிற்கும் பிரமச்சாரியாக அவனும் நின்ற போதுதான் அவன் மதுவைக் கண்டு கொண்டான்.
மதுவின் சினேகம் அவனைத் தென்றலாய் தழுவிய போதுதான், தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். தனக்கும் ஒரு வாழ்வு வரப் போகிறதென்ற மகிழ்வில் அது பற்றி ஊருக்கு எழுதினான்.
"இன்னுமொரு தங்கை இருபந்தைந்து வயதில் கல்யாணமாகாமல் இருக்க... உனக்கென்ன அவசரம்..?" என்றது ஊர்க்கடிதம்.
வாழ்க்கை ஆசை அவனை வாட்ட, யார் சம்மதமுமின்றி, பதிவுத் திருமணம் செய்து மதுவை மனைவியாக்கிக் கொண்டான்.
அதுதான் இப்போ பிரச்சனை. "தங்கை இருக்க நீ கல்யாணம் செய்தது மாபெருந்தப்பு" என்று அம்மாவும் அப்பாவும் மட்டுமில்லை. மாமா மாமி சித்தப்பா சித்தி... என்று எல்லோருமே மனங் கொண்ட மட்டும் திட்டி எழுதி விட்டார்கள்.
மனம் சலித்து விட்டது. யாரும் அவனுக்கு இப்போ கடிதம் எழுதுவதில்லை. ஆனாலும் மாசம் தவறாது வவுனியா வரை வந்து தொலைபேசியில் அழைத்து பணத்தை உண்டியல் மூலம் எடுத்துப் போக அப்பா மறப்பதில்லை.
ஓடிப்போனவன் ரெலிபோனை எடுத்தான். அப்பாவின் அழைப்புத்தான் அது. ஓரு நிமிட அழைப்பில் "திருப்பி எடு" என்று சொல்லி விட்டு அப்பா வைத்து விட்டார். திருப்பி எடுத்தான். ஊர் நிலைமை பற்றி, கஷ்டங்கள் பற்றி அப்பா நிறையச் சொன்னார்.
அம்மா சகோதரங்கள் பற்றி நாத்தழுதழுக்க விசாரித்தான்.
"தம்பி..! இந்த முறை கொஞ்சங் கூடவா அனுப்பு தம்பி! நீ அனுப்பிறது ஒரு மூலைக்கும் போதுதில்லை. எல்லாம் விலை. கொக்கான்ரை பிள்ளைக்கும் பிறந்தநாள் வருது. அதுவும் பெரிசாச் செய்யாட்டி உனக்குத்தான் மரியாதையில்லை. ஒரு ஆயிரமாவது கூட அனுப்பு...... நாளைக்குக் காசு கொண்டு வந்து தந்திடுவினைதானே..!" அப்பா மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.
ஏற்கெனவே ஏஜென்சிக்குக் காசு கட்டிவிட்டு மொஸ்கோவில் இரண்டு வருடங்களாக நிற்கும் தம்பியை வெளியில் எடுக்க இன்னும் சில ஆயிரங்கள் ஏஜென்சிக்குக் கொடுக்க வேண்டும். அந்தப் பணப் பிரச்சனையே கோபுவின் தலைக்குள் சுமையாக இருக்க அப்பா இன்னுமொரு ஆயிரம் கூடக் கேட்கிறார்.
ஏற்கெனவே குற்றவாளிக் கூண்டில் உறவுகளால் நிறுத்தப் பட்ட அவனால் -அப்பாவின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை.
"ஓமப்பா நான் அனுப்புறன். நாளைக்கே காசைக் கொண்டு வந்து தருவினம்." என்றான்.
"உன் மனைவி மது எப்படி இருக்கிறாள்?" என்று அப்பா ஒரு வார்த்தை கேட்கவில்லை. தொலைபேசி வைக்கப் பட்டு விட்டது.
கோபுவின் மனம் வேதனைப் பட்டது.
இந்த ஆயிரங்களை எப்படிச் சமாளிக்கலாம் என்ற யோசனையில் வேதனை விரக்தியாக மாறி யோசனையில் மூளை குழம்பியது. ஆறுதல் படுத்த இருக்கும் மனைவியுடனும் ஆறி இருந்து பேச நேரமில்லை. அடுத்த வேலைக்குப் போவதற்கிடையில் இன்னும் ஒரு மணித்தியாலம் தான் படுக்கலாம். ஓடிப் போய் படுத்தான். ஆனால் தூக்கம் அவனை விட்டு தூர விலகியிருந்தது.
-முற்றும்-
சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
October-2000
பிரசுரம் - ஈழமுரசு (4 - 10 ஜனவரி - 2001)

Subscribe to:
Posts (Atom)