தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம். காந்தன் அவளை விட்டுச் சென்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.
காந்தனைப் பிரிவதென்பது காந்தனும் அவளுமாக முதலே பேசித் தீர்மானித்துக் கொண்ட விடயம்தான். ஆனால் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னான அந்தப் பிரிவு நியத்தில் இவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை அவளால் அப்போது கணிப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
கணிப்பிட்டுத் தெரிந்து கொண்டிருந்தாலும் கூட அவள் செய்வதற்கும் ஒன்றும் இருக்கவில்லை. காந்தனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளைப் பிடித்திருந்தாலும், அவள் யேர்மன் பெண்ணாக இருப்பதால் அவளைக் காந்தன் திருமணம் செய்து கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
"எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள்." இது காந்தனின் பெற்றோரின் வாய்ப்பாடம். அவர்களை மீற முடியாத காந்தன். இவர்களுக்குள் சிக்கிய தமாரா.
காந்தன் நல்லவன்தான். காந்தனை அவனது பன்னிரண்டாவது வயதிலிருந்தே தமாராவுக்குத் தெரியும். அவள் காந்தன் படிக்கும் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் போய்ச் சேர்ந்த போது, காந்தன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
பாடசாலை நிறைந்த வெள்ளை மாணவர்களுக்கு மத்தியில் மாநிறம் கொண்ட காந்தன் பளிச்சென்று வித்தியாசமாகத் தெரிந்தான். அவனது சுருண்ட கேசமும், அழகிய கண்களும் பார்ப்பவர்களை அவன்பால் ஈர்த்தாலும் அவன் எப்போதும் மற்றவர்களிடமிருந்து சற்று ஒதுங்கித் தனிமைப் பட்டே இருந்தான். ஏதோ ஒரு சோகம் அவன் கண்களுக்குள் எப்போதும் ஒளிந்திருந்தது. பாடசாலை வெளிகளில் அவனைக் காணும் வேளைகளில் தமாராவின் கவனத்துக்குள் இவைகள் அகப் படத் தவறவில்லை. ஆனாலும் சின்னப் பெண்ணான அவளுக்கு அப்போது அவனை நெருங்கும் துணிவோ அல்லது அவனது தனிமை பற்றி விசாரிக்கும் தைரியமோ அவ்வளவாக இருக்கவில்லை.
காலப் போக்கில் காந்தனின் திறமையும், படிப்பில் அவன் கொண்டிருந்த கெட்டித்தனமும் எல்லா மாணவர்களுக்கும் அவன் மேல் ஒரு மதிப்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்த ஆசிரியர்களிலிருந்து மாணவர்கள் வரை எல்லோருமே அவனது நிறத்தைப் பற்றி அக்கறைப் படாமல் அவனோடு சரளமாகப் பழகத் தொடங்கினார்கள். இவையெதுவும் காந்தனின் கண்களுக்குள் இருந்த சோகத்துக்கு விடுதலை கொடுக்க வில்லை.
பதினான்கு வயது வரமுன்னரே ஆளாளுக்கு சிகரெட்டும் காதலும் என்று திரிய இவன் மட்டும் தனியாக இருந்தான். இது தமாராவுக்கு இவன் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகமாக்கியது. மெது மெதுவாக இவனை நெருங்கத் தொடங்கினாள். பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்.
தாயக தேசத்தின் அனர்த்தங்களை சிறு வயதிலேயே பார்த்து விட்டு வந்த பாதிப்பு அவனுள் ஆழமாகப் பதிந்திருப்பதை அவன் பேச்சில் உணர்ந்தாள்.
"நான் என்ரை தாய்நாட்டுக்குத் திரும்போணும். என்ரை தாய்நாட்டின்ரை விடுதலைக்காகப் போராடோணும்." என்ற ஒரு தீவிரத் தன்மை அவனுள் இருப்பதைக் கண்டு இப்படியும் நாட்டுப் பற்று இருக்குமா என வியந்தாள்.
அவன் பேசும் போதெல்லாம் அவனது நாடு பற்றியும் அங்குள்ள அனர்த்தங்கள் பற்றியுமே அவளுடன் பேசினான். "எல்லாரும் ஆளுக்கொரு பெண் நண்பிகளோடை திரிய நீ மட்டுமேன் பிரமச்சாரி மாதிரி இருக்கிறாய்?" என அவள் கேட்ட போது "நான் தமிழனாய் வாழோணும். தமிழ்ப் பெண்ணைக் காதலிக்கோணும். தமிழ்ப் பெண்ணையே திருமணமும் செய்யோணும்." என்றான்.
இவனது இப்படியான பேச்சுக்களால் இவனை ஒரு தீவிரவாதி என்று திட்டித் தீர்த்தவர்களும் இருக்கிறார்கள்.
சொன்னது போலக் காந்தனுக்கு முதலில் ஒரு தமிழ்ப் பெண் மீதுதான் காதல் வந்தது. காதலிப்பதே உலக மகா குற்றம் எனக் கருதும் தமிழ் சமூகம் அந்தக் காதலை ஏற்றுக் கொண்ட விதம்தான் மிகவும் அநாகரீகமாக இருந்தது. கண்களால் மட்டும் கதை பேசிக் கொண்டிருந்த காந்தனும், அந்தத் தமிழ்ப் பெண்ணும் ஒரு புகையிரத நிலையத்தில் எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டதும் மணிக் கணக்கில் நின்று பேசியதும் எப்படியோ அவளது பெற்றோருக்குத் தெரிய வர அவர்கள் காந்தன் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு "குய்யோ முறையோ" என்று கத்த... அந்நாளில் ஊரில் சைக்கிளில் பெண்களுக்குப் பின்னால் சுற்றிய காந்தனின் அப்பா கூட "காதல் தப்பானது" என்று கூறி, காந்தனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார். காந்தனின் உணர்வுகளை மதிக்க மறந்தார். சமூகம் அவனைப் பார்த்து "ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்பவன் சீர் கெட்டவன்" என்பது போல எள்ளி நகையாடியது.
முதற் காதல் முளையிலேயே கிள்ளியெறியப் பட்ட ஏமாற்றத்தை எங்காவது கொட்டித் தள்ள வேண்டும் என்ற நிலையில் காந்தன் முதன் முறையாக தமாராவுடன் மனம் விட்டுப் பேசினான். தமிழர் கலாச்சாரம் பற்றியும் அங்கு காதலுக்குள்ள மரியாதை பற்றியும் விளக்கினான். சங்ககாலத்தில் காதல் வரவேற்கப் பட்டாலும், இன்றைய கலாச்சாரத்தில் அவைகள் புறக்கணிக்கப் படுவதற்கான தனக்குத் தெரிந்த காரணங்களை விளக்கினான்.
தமிழ்ப் பெண்களுடன் பழகவோ, பேசவோ, சிரிக்கவோ முடியாத சூழ்நிலை மட்டுமல்லாமல், அவன் வாழும் நகரில் தமிழ் ஆண் நண்பர்களைக் கூட தேடிக் கொள்ள முடியாத நிலையில் அவனது உணர்வுகளுக்கும் கோபங்களுக்கும் வடிகாலாய் அமைந்தது பார்வைகளாலேயே வருடி விடும் தமாராவின் அன்பு ஒன்றுதான்.
அந்த அன்பும் ஆதரவும்தான் கால ஓட்டத்தில் காதலாகி, தமாரா வீட்டில் எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லாத காரணத்தால், காந்தனின் அப்பாவின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆழ வேரூன்றி விட்டது.
காதல் அரும்பி விட்டதை அறிந்ததும், தமாரா காந்தனின் வீட்டுக்கு வருவதற்கு முற்று முழுதான தடை காந்தனின் அப்பாவால் விதிக்கப் பட்டது. அதனால் பாடசாலை தவிர்ந்த வேளைகளில் சந்திப்புகள் தமாரா வீட்டில் தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் காந்தன் தமாராவுடன் சேர்ந்து தமாரா வீட்டிலேயே வாழத் தொடங்கி விட்டான். காதலை வேலி போட்டுத் தடுக்க முடியாது என்ற உண்மையை உணர மறந்த அப்பாவின் காட்டுக் கத்தல்களும், குத்தல் கதைகளும் அவனை நோகடித்தாலும் அம்மாவுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். "அப்பாதானே..! அவர் கோபம் அவர் நிலையில் நியாயமானதுதானே!" என்று தனக்குத் தானே சமாதானமும் கூறிக் கொண்டான்.
அப்பாவின் கெட்டித்தனம் எப்போதும் அம்மாவின் அன்பை ஆயுதமாக்குவதுதான். அவர் அம்மாவை முடுக்கி விடுவார். அதன் பிரதி பலனாய் அம்மா காந்தனைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்தக் கதையில் தொடங்கினாலும் சுற்றி வளைத்துக் கடைசியில் காந்தனின் கல்யாண விடயத்துக்கே வந்து விடுவா. "எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள். அவளை விட்டிட்டு வந்திடு... உனக்கு லட்சணமான எங்கடை நாட்டுப் பிள்ளை ஒண்டைக் கட்டித் தந்தால்தான் நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்....." என்றுதான் கதையை முடிப்பா.
இப்படியான அம்மாவின் கதைகளும், அதனாலேற்படும் அம்மாவுடனான வாக்கு வாதங்களும், தனியாகச் சிந்தித்து ஒரு தீர்மானத்துக்கு வர முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுப்பவையாகவும் எரிச்சல் கொடுப்பவையாகவுமே காந்தனுக்கு இருந்தன. இவைகளைக் காந்தன் தமாராவுக்கும் சொல்லத் தவறுவதில்லை. ஆனாலும் என்றைக்கோ ஒரு நாள் மனம் மாறி அவர்கள் தன்னைக் காந்தனின் மனைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் தமாரா காத்திருந்தாள்.
"இஞ்சரும் பார்த்துக் கொண்டிருந்தால் இவன் இப்பிடியே இருப்பான். ஊரிலை இருந்து ஒண்டைக் கூப்பிட்டிட்டம் எண்டால் பேசாமல் தாலியைக் கட்டிப் போட்டு வீட்டோடை இருந்திடுவான்." அப்பா சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் துணிந்து காந்தனுக்கென்று ஒரு பெண்ணை தாயகத்திலிருந்து அழைத்தும் விட்டார். அம்மாவுக்கு காந்தனின் மனதைப் புண்படுத்த விருப்பமில்லா விட்டாலும் அப்பாவை எதிர்க்கும் தைரியமும் இல்லை.
பெண்ணைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு திருமணம் செய்து விடும் படி வற்புறுத்தினார்கள். காந்தனுக்கு இக்கட்டான நிலை. தமாராவை மறக்கவோ, பிரியவோ மனசில்லை. ஆனால் வந்த தாயகத்துப் பெண்ணும் அழகாக, மிக இளமையாக, புத்தம் புது மலராக இருந்தாள். அது போக இவனுக்காக என்று வந்து காத்திருந்தாள்.
இவையெல்லாம் தமாராவுக்குள் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவள் தனக்கே உரிய பெருந்தன்மையுடன் "காந்தன்..! நீ உன்ரை அம்மா அப்பாவை எதிர்த்து என்னைத் திருமணம் செய்யிறதை விட அவையளுக்குப் பிடித்தமான உனக்கென வரவழைக்கப் பட்ட உன்ரை நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யிறதுதான் நல்லது. அதுதான் உன்னைப் பெற்றவையளுக்கு நீ செய்யிற நன்றிக் கடன்." என்றாள். உள்ளுக்குள்ளே "தான் அப்படிச் சொன்னாலும் காந்தன் தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியை மணக்க மாட்டான்" என முழுமையாக நம்பினாள்.
ஆனால் கலாச்சாரம் என்றும் தமிழர் பண்பாடு என்றும் செவிப்பறை அதிரக் கத்தும் காந்தனின் பெற்றோரிடம், தாம் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் ஒரு துளியும் இருக்கவில்லை. தமது மகனோடு சேர்ந்து வாழ்ந்த ஒருத்தியைத் தள்ளி வைத்து விட்டு இன்னொருத்தியை அந்த இடத்தில் அமர்த்தப் போகிறோமே என்ற குற்ற உணர்வு கூட இருக்கவில்லை.
தமது மகன் நன்றாக வாழ வேண்டும். தமது மகன் வேற்று நாட்டுக் காரியை மணம் முடித்தான் என்று ஊர் பேசாதிருக்க வேண்டும்... என்பது போன்றதான சுயநலமான, தற்பெருமை கொண்டதான எண்ணங்களும், தன்மைகளும்தான் அவர்களிடம் இருந்தன.
தமது மகனால் ஒரு ஐரோப்பியப் பெண்ணின் வாழ்வு சிதைக்கப் பட்டிருப்பதோ, மன உணர்வுகள் வதைக்கப் பட்டிருப்பதோ அவர்களுக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தாலும் அவர்களுக்கு அது பற்றி அக்கறை இல்லை.
ஆனாலும் குற்ற உணர்வுகள் காந்தனுக்குச் சாட்டையடி கொடுத்துக் கொண்டுதானிருந்தன. அதனால்தான் தனக்கென ஒருத்தி நாட்டிலிருந்து வந்த பின்னும் மனம் குழம்பியவனாய் தமாராவை அடிக்கடி சந்தித்தான். திருமணத்திற்கான நாட்கள் நெருங்க நெருங்கத்தான் இனியும் இப்படிச் சந்திப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்தவனாய் முடிந்தவரை "இனி நாம் சந்திக்காமல் இருப்போம்" என்ற முடிவைத் தமாராவுடன் சேர்ந்தெடுத்தான்.
இன்று அவனுக்குத் திருமணம். தமாராவுக்கு ஒன்றையும் நம்ப முடியாமல் இருந்தது. காதல் தோல்வி என்றதும் ஒரு தமிழ்ப் பெண் போல ஓடிப்போய் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவளிடம் கோழைத்தனம் இல்லையென்றாலும், மனசு ஓவென்று அழுது கொண்டே இருந்தது. அவளும் பெண்தானே. வெள்ளைத் தோல் என்றால் மனசு என்ன கல்லாகவா இருக்கும்!
"காந்தன் உண்மையிலேயே என்னைக் காதலிக்க வில்லையா..? காதலித்திருந்தால் நான் போக மாட்டேன் என்று நின்றிருப்பானே..!" என்ற ஆதங்கமான எண்ணங்களும், கேள்விகளும் அவளுள் அடிக்கடி எழுந்தன.
"அவன் என்ன செய்வான்...? பாவம்..!" என்ற சமாதானப் பதில்களும் அவளுக்குள்ளேயே இருந்தன.
கனத்த மனசுடன் கட்டிலில் இருந்து இறங்கினாள். கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்ததால் அலுமாரிக்குள்ளிருந்து சின்னச் சருகைக் கரை போட்ட வெளிர் நீலச்சேலையை எடுத்துக் கட்டிலில் வைத்து விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
காந்தனுடன் ஸ்ருட்கார்ட்க்குப் போய் பிருந்தா சில்க் கவுசில், அந்தச் சேலை வாங்கிய நாள் நினைவில் வந்தது. வீட்டுக்கு வந்ததும் அதை "உடனேயே உடுத்திக் காட்டு." என்று காந்தன் கரைச்சல் படுத்த அவள் உடுத்தத் தெரியாமல் திண்டாட, காந்தன் தனக்கேதோ தெரிந்த மாதிரி உதவி செய்கிறேனென்று சொருகிக் கிருகி.... அத்தனை சோகத்துக்குள்ளும் தமாராவுக்குச் சிரிப்பு வந்தது.
பிறகு அவள் சேலை எப்படி உடுத்துவது என்பதை VolLkshochschule யில் நடந்த ஒரு வகுப்புக்குப் போய் பழகி விட்டு வந்து காந்தனை அசத்தியது, எல்லாமே காந்தனுடன்தான் தன் வாழ்க்கை என்ற நம்பிக்கையில்தானே! இப்போ எல்லாம் வெறும் நினைவுகளில் மட்டுந்தான்.
குளிக்கும் தண்ணீரோடு கண்ணீரும் கரைந்தோடக் குளித்து விட்டு வந்தவள், சேலையை உடுத்தி, பொட்டு வைத்துக் கொண்டு கல்யாண வீட்டுக்குப் புறப்பட்டாள். போற வழியில் பூக்கடைக்குள் நுழைந்து மிகவும் அழகிய பெரியதொரு பூங்கொத்தைக் கட்டுவித்து வாங்கிச் சென்றாள்.
கல்யாண மண்டபத்துள் தமாரா நுழைந்த போது "இவளென்ன கிரகசாரத்துக்கு இங்கை வாறாள்" என்று மனசுக்குள் முணுமுணுத்த படி காந்தனின் அம்மாவும் அப்பாவும் மலங்க மலங்க விழித்தார்கள்.
அவள் எந்த வித அலட்டலுமில்லாமல் புன்னகை பூத்த முகத்துடன் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, மணப்பந்தலில் அமர்ந்திருந்த காந்தனின் அருகே சென்று, காந்தனையும் அருகிருந்த தமிழ்ப் பெண்ணையும் வாழ்த்தி பூங்கொத்தையும் கொடுத்து விட்டு அவசரமாய் திரும்பினாள்.
அவள் கண்களிலிருந்து சில துளிகள் அவளையறியாமலே கன்னங்களில் வழிந்தன. அந்தத் துளிகளில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருப்பதையோ, அது அவள் மனசை அழுத்துவதையோ யாரும் கண்டு கொள்ளவில்லை.
சந்திரவதனா
யேர்மனி
12.12.2002
Wednesday, April 27, 2005
Wednesday, April 13, 2005
சத்தமில்லாத யுத்தங்கள்
இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, "அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன்" என்று துளசி சொன்ன போது கோமதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.
"என்ன நீ விளையாடுறீயே..? அதென்ன பிடிக்கேல்லை எண்டிறதும் அவரை விட்டிட்டுத் தனிய வாழப் போறன் எண்டிறதும்...! எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிட்டுதே?" கோமதி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய்க் கத்தினாள்.
"இல்லை அம்மா. எனக்குப் பைத்தியமும் இல்லை. கியித்தியமும் இல்லை. அவரோடை வாழத்தான் பிடிக்கேல்லை." துளசி சற்று எரிச்சலுடன் கீச்சிட்டாள்.
`என்ன கிரகசாரமடா இது! ஐநூறு கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற ஹனோபர் வரை போய், தில்லையம்பலத்தார் நல்ல சாத்திரி என்று எல்லாரும் சொல்லுகினம் என்று அவரட்டைச் சாதகத்தைக் காட்டி, பொருத்தம் பார்த்து, பிறகு ஐயரிட்டைப் போய் நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்துத்தானே எல்லாம் செய்தது. பிறகேன் இப்படி நடக்குது.` கோமதி குழம்பினாள்.
´ஊர் கூட்டி, உறவுகளுக்கெல்லாம் சொல்லி, உலகின் அந்த அந்தத்திலிருந்து இந்த அந்தம் வரை பார்த்துப் பார்த்து ஈ மெயிலாய் அனுப்பி, ரெலிபோனாய் அடித்து, கடிதங்களாய் எழுதி தம்பட்டம் அடித்து, ஹோல் எடுத்து மணவறை போட்டு, இல்லாத அருந்ததி பார்த்து எல்லாரும் வாழ்த்தத்தானே திருமணம் நடந்தது. ஐந்து மாதங்கள் கூட சரியாக நகரவில்லை. அதற்கிடையில் இவளுக்கு என்ன வந்தது. ஏன் இப்படி அதிரடி முடிவெடுத்தாள்...!` கோமதிக்குத் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
"நீ கெட்டிக்காரி. மோளுக்கு நல்ல ஒரு பெடியனாப் பார்த்துக் கட்டிக் குடுத்துப் போட்டாய். யேர்மனிலை இப்பிடி படிச்ச நல்ல குடும்பத்து மாப்பிளை கிடைக்கிற தெண்டால் லேசில்லை. நீ கெட்டிக்காரிதான். இனியென்ன? உனக்கு ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரித்தான்." ஏதாவது விழாக்களிலோ அல்லது கடைத் தெருக்களிலோ யாராவது தெரிந்த தமிழ்ப் பெண்களைச் சந்திக்கும் போது அவர்கள் இப்படித்தான் சொல்லி கோமதியின் மனதைக் குளிர வைப்பார்கள்.
"நல்லாத்தான் இப்பப் பாரம் குறைஞ்சிருக்கு. இவள் என்ரை தலையிலை பாறாங்கல்லை எல்லோ தூக்கிப் போட்டிருக்கிறாள்." கோமதியின் மனசு முணுமுணுத்தது.
துளசியோ ஒரு கவலையுமில்லாமல் சீடீ ஸ்ராண்ட் இல் இருந்து சீடீ ஒன்றை எடுத்துப் போட்டு, பாட்டை ஓட விட்டிட்டு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக் கொண்டிருந்தாள். கோமதிக்கு அவளின் இந்த அலட்டிக் கொள்ளாத தன்மை எரிச்சலையே தந்தது.
கோமதியும் அந்த நாட்களில் ஆடினவள்தான். ஆனால் அது பரதநாட்டியம். அதுவும் அவளின் கழுத்தில் எப்ப தாலி ஏறிச்சுதோ அன்று வரைக்கும் தான். அதற்குப் பிறகு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுவிட்டது. அவளுக்கும் அந்த நாட்களில் வீட்டில் சில சமயங்களில் ஆடவேண்டும் போல ஆசை வரும். இனி ஆட முடியாதென்னும் போது அழுகையும் வரும்.
ஆடவேண்டும் போல் காலும் கையும் பரபரக்கும் போதெல்லாம் "நீ ஆடுறது எனக்குப் பிடிக்கேல்லை" என்று அவள் கணவன் அதுதான் துளசியின் அப்பா முதலிரவன்றே சொன்ன வார்த்தைகள் நினைவுகளில் ஒலிக்க அப்படியே கண்கள் பனிக்க கோமதி தன்னைக் கட்டிப் போட்டு விடுவாள்.
பரதநாட்டியம் மட்டுமே! இப்படி எத்தனை விடயங்கள் திருமண பந்தத்தில் உருவழிந்து போய் விட்டன. அதற்காக இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருக்காலும் அவள் தன் கணவனை விட்டிட்டுப் போக வேண்டும் என்று நினைத்ததில்லையே!
ஆனால் ஐந்தே ஐந்து மாதத்தில் அவள் பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் மகள் துளசி வந்து வேண்டிக் கொடுத்த பொம்மையை வேண்டாம் என்று சொல்வது போல கணவனை வேண்டாம் என்கிறாளே! என்ன செய்வதென்று தெரியாமல் கோமதி குழம்பினாள்.
இந்தக் காலப் பிள்ளைகளிடம் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் தன்மையும், எதையும் தூக்கி எறிந்து பேசும் தன்மையும் சற்று மிகையாகவேதான் உள்ளன. அதுவும் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள், ஒரு விதமான இரட்டைக் கலாச்சாரத்துள் அகபபட்டு, அவர்களை அழுத்தும் மன உளைச்சல் காரணமாகவோ அல்லது எதிலும் முழுமையாக ஒட்ட முடியாத இயலாமை காரணமாகவோ தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பெற்றோருடன் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கோமதியின் மகளும் விதி விலக்கானவளல்ல.
இரவுகளில் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது வேறு விழாக்களுக்கோ அல்லது டிஸ்கோவுக்கோ செல்ல அனுமதி மறுக்கப்படும் போது துளசியின் முட்டி மோதலையும் வாக்கு வாதத்தையும் சட்டை செய்யாதவள் போல் கோமதி நடித்திருந்தாலும், இந்த யேர்மனிய வாழ்வில் அது எத்தகையதொரு பாதிப்பை துளசியிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவள் உணராமலில்லை.
அதனால் சமயம் வரும் போதெல்லாம் துளசியை தன்னுடன் அழைத்து, அன்பால் அணைத்து, ஆறுதலான வார்த்தைகளால் அறிவுரை சொல்லுவாள். அது துளசியின் ஆதங்கங்களை முற்றாக சமாதானப் படுத்த வில்லை என்பது கோமதிக்குத் தெரிந்தாலும் கோமதியாலும் ஒன்றும் செய்யமுடியாமலே இருந்தது.
கோமதியும் பெண்தானே. அவளும் இந்தக் கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் மூச்சடங்கி முக்குளித்தவள் தானே.
ஆனாலும் "இந்தக் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ ஐரோப்பியக் கலாச்சாரத்துடன் வாழ்" என்று தன் பெண்ணிடம் சொல்ல எந்தத் தமிழ்த்தாய்தான் மனந்துணிவாள். என்னதான் புதுமை, புரட்சி என்று பேசினாலும், எழுதினாலும் தமது குடும்பம் என்று வரும் போது, என் பெண் இந்தக் கலாச்சாரம் பண்பாடுகளிலிருந்து நழுவி விடக் கூடாதே என்பதுதான் பெண்ணைப் பெற்றவர்கள் எல்லோரதும் கவலை.
இந்த நிலையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றும், சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தும் வாழும் கோமதியின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கோமதி கூட ஒரு இரண்டும் கெட்டான் மனநிலையில் போராடுபவள் தான். படித்த, உலகம் தெரிந்த அவள் மனதுக்கும், நான் ஆண் என்ற திமிர்த்தனம் சற்றும் குறையாத கணவனுடனான அவள் வாழ்வுக்கும் இடையில் அவள் நிறையவே போராட்டம் நடத்தி விட்டாள். ஆனால் அவள் போராட்டம் எப்பொழுதுமே அவள் மனதுக்குள் தான். மற்றும் படி கணவன் எள் என்ற உடனே இவள் எண்ணெய்யாக நிற்பாள்.
இந்த மனதோடு ஒரு வாழ்வு, நியத்தில் ஒரு வாழ்வு என்ற இரட்டை வேஷம் கோமதி அறியாமலே கோமதியிடம் ஒரு வித மன உளைச்சலைக் கூட ஏற்படுத்தியிருந்தது. அதனால்தானோ என்னவோ கோமதி துளசியின் விடயத்தில், துளசியின் சின்னச் சின்ன ஏமாற்றங்களையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவளாக இருந்தாள். இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாத நிலையில் துவண்டாள்.
துளசி பெண் என்ற ஒரே காரணத்துக்காக, சில சின்னச் சின்ன விடயங்களில் கூட தடைகள் விதிக்கப்பட்டு அனுமதிகள் மறுக்கப் பட்ட போது, துளசி அப்பா அம்மாவை மீற முடியாத இயலாமையில் பொங்கி எழுந்து, அழுது ஆர்ப்பரிக்கையில் கோமதியும் அழுதாள். நாங்கள் தமிழ்ப் பெண்கள் என்பதையும், பண்பாட்டின் பெருமையையும் விளக்கி அவளைச் சமாதானப் படுத்தினாள்.
ஆனாலும் துளசியின் ரீன்ஏஜ் பருவம் துளசிக்கு மட்டுமல்லாமல், துளசியைத் திருப்திப் படுத்த முடியாத துளசியின் அம்மாவான கோமதிக்கும் கூட மிகுந்த மன உளைச்சலான வேதனையான கால கட்டமாகவே இருந்தது.
அதன் பிரதி பலன்தான் இதுவோ? துளசி கணவனை வேண்டாம் என்று சொல்வது ஏதோ பழி தீர்க்கும் படலம் போலவே கோமதிக்குத் தோன்றியது. கட்டுப்பாடுகளை உடைத்தெறிய அன்று பதினான்கு வயதில் அவளுக்கு முடியவில்லை. இன்று இருபத்தினான்கு வயதில் அவள் அப்பாவை மட்டுமல்ல இந்த சமுகத்தையே பழிவாங்க நினைக்கிறாளோ!
கோமதியின் சிந்தனை பல விதமாக எண்ணியது. இருபத்து நான்கு வயதுப் பெண்ணுக்கு அடித்தோ உதைத்தோ ஒன்றையும் திணிக்க முடியாது. அதுவும் துளசி அப்பா போலவே பிடிவாதக்காரி. அவளிடம் அன்பால் மட்டும்தான் ஏதாவது செய்ய முடியும். கோமதிக்கு அது நன்கு தெரியும்.
என்ன செய்யலாம்...! துளசியை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம்...! என்ற யோசனைகளோடே அன்றைய இரவு அமைதியின்றிய அரைகுறைத் தூக்கமும், யோசனை கழிந்த விழிப்புமாய் கோமதிக்குக் கழிந்தது.
விடிந்தும் விடியாத பொழுதிலேயே தூக்கம் முழுவதுமாய்க் கலைந்து விட எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாள். நினைவு மட்டும் துளசியுடன் எப்படிப் பேசலாமென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. கணவருக்குக் கூட இன்னும் நிலைமையைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒரு குதி குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணி "நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறாய்" என்று கோமதியையும் சாடி விட்டு வேலைக்குப் போயிருப்பார்.
கோமதியின் எண்ணம், கணவரின் காதுக்கு விடயம் எட்டாமலே துளசியின் மனத்தை மாற்றி விட வேண்டுமென்பதுதான்.
கோமதி நினைவுகளுடன் போராடியபடி இருக்க துளசி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு வந்தாள்.
"அப்பா என்னவாம்?" என்றாள்.
"அப்பாக்கு நானொண்டும் சொல்லேல்லை. சொன்னால் இப்ப ஒரு பிரளயம் எல்லோ நடந்திருக்கும். ஏதோ இண்டைக்கு நேற்றுத்தான் உனக்கு அப்பாவைத் தெரியும் போலை இருக்கு உன்ரை கேள்வி. இதை என்னண்டு அப்பாட்டை நான் சொல்லுறது." கோமதி தனது எரிச்சலையும் கோபத்தையும் வெளியில் காட்டாமல் துளசியின் வினாவுக்குப் பதிலளித்தாள்.
"அம்மா இது மறைக்கிற விசயமில்லை. அப்பா குதிப்பார் எண்டதுக்காண்டி முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ளை மறைக்கேலாது" துளசி கத்தினாள்.
"இஞ்சை பார் பிள்ளை. இங்கை கத்துறதிலையோ, ஆர்ப்பாட்டம் பண்ணுறதிலையோ ஒரு அர்த்தமும் இல்லை. கொஞ்சமாவது யதார்த்தத்தை யோசிக்கோணும். கலியாணம் எண்டுறது ஆயிரம் காலத்துப் பயிர். அதை நீ இப்பிடி தூக்கி எறிஞ்சிட்டு வாற விசயமெண்டு மட்டும் நினைக்காதை. ஏன் அவருக்கும் உனக்கும் இடையிலை என்ன பிரச்சனை நடந்தது?இன்னொருக்கால் அவரோடை கதைச்சுப் பார்க்கலாம்தானே!" கோமதி துளசியின் குணம் தெரிந்தவளாய் துளசியை ஆறுதல் படுத்தும் விதமாகக் கதைத்தாள்.
"அம்மா நானும் அவரும் கதைச்சுத் தான் இந்த முடிவுக்கு வந்தனாங்கள். எனக்கும் அவருக்கும் ஒத்து வராது. என்ரை இன்றெஸ்ற் (Interest) வேறை அவற்றை இன்றெஸ்ற் (Interest) வேறை. அது தான்....." துளசி இழுத்தாள்.
"கலியாணம் எண்டு நடந்தால் இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து இன்றெஸ்ற் (Interest) களை மாத்தித்தான் வாழோணும். அதை விட்டிட்டு இதுக்காண்டி ஆரும் எல்லாத்தையும் தூக்கி எறிவினமோ? என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு எடுத்திருக்கிறாய்...?" வினவினாள் கோமதி.
"பின்னை என்ன உங்களை மாதிரி என்னையும் வாழச் சொல்லுறிங்களே? நீங்கள் ஆசை ஆசையாப் படிச்ச பரத நாட்டியத்தை அப்பாக்காண்டி விட்டது போலை...! அம்மா நான் வாழ ஆசைப்படுறன். ஆருக்காண்டியும் என்ரை ஆசையளை கனவுகளை புதைக்க நான் தயாரா இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் குடுத்துத்தான் வாழோணும் எண்டு பேச்சுக்குச் சொல்லலாம். ஆனால் வாழுற போது அப்பாக்காண்டி நீங்கள் எல்லாத்தையும் விட்டுக் குடுத்தீங்கள். உங்களுக்காண்டி அப்பா என்னத்தை விட்டுத் தந்தவர் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம். எங்கடை ஆக்கள் ஒருத்தருக் கொருத்தர் விட்டுக் குடுக்கிறது எண்டு சொன்னால் அதுக்கு அர்த்தம் பொம்பிளையள் எல்லாத்தையும் விட்டுக் குடுக்கோணும் எண்டுறதுதான். என்னாலை அது முடியாது." துளசி ஆக்ரோசமாகக் கத்தினாள்.
கோமதி சில நிமிடங்களுக்கு வாயடைத்துப் போனாள். பிறகு நிலைமை விபரீதமாகப் போகப் போவதை உணர்ந்து கொண்டவளாய் "என்ன செய்யிறது துளசி. வாழ்க்கை எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். பொம்பிளையள்தான் ஒரு மாதிரி சமாளிச்சு விட்டுக் குடுத்து கெட்டித்தனமா வாழோணும். இஞ்சை பார் நான் இருபத்தைஞ்சு வருசமா உன்ரை கொப்பரோடை வாழேல்லையே?" என்று சமாளிக்கும் வகையில் பேசினாள்.
"அம்மா நீங்கள் வாழுறது ஒரு வாழ்க்கையே....? நீங்கள் வாழுறிங்களே! அதுக்குப் பேர் வாழ்க்கை யெண்டு மட்டும் சொல்லாதைங்கோ. திருமணம் எண்ட பேரிலை ஒரு அடிமை சாசனம் எழுதி, அதுக்கு வாழ்க்கை எண்டு ஒரு பெயர் வைச்சிருக்கிறீங்கள். எனக்குப் பிடிக்காத, எனக்கு சந்தோசம் தராத வாழ்க்கையை நான் வாழோணுமெண்டு ஏன் என்னைக் கட்டாயப் படுத்திறீங்கள்?" மிகவும் எரிச்சலுடன் துளசி சத்தம் போட்டாள்.
கோமதிக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. பதினாறு வயதில் கதைத்தே துளசியின் காதலைக் கத்தரித்தது போல, துளசியின் இருபத்து நாலு வயசில் துளசியைக் கதைத்து வெல்வது சுலபமான விடயமல்ல என்பது! கட்டுப்பாடுகள், அதனால் வந்த ஏமாற்றங்கள் மட்டும் என்றில்லாமல், புலம் பெயர் மண்ணின் பல்கலைக்கழகப் படிப்பும் துளசியைப் புடம் போட்டு எடுத்திருந்தது.
இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில் கோமதியின் மனம் கவலை கொள்ளத் தொடங்கியது. "மகளை நல்ல இடத்தில் கட்டிக் குடுத்திட்டாய்" என்று வாயாரப் புகழ்ந்தவர்கள் எல்லாரும் இப்ப முன்னாலை நீலிக் கண்ணீர் வடிச்சிட்டு பின்னாலை, முகவாய்க்கட்டையை தோள் மூட்டில் இடிச்சு "பாரன் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறா" என்று சொல்லி நையாண்டி பண்ணப் போகிறார்கள். என்ற நினைப்பே கோமதிக்குச் சங்கடமாக இருந்தது.
இனி செய்வதற்கொன்றும் இல்லை. கடைசி ஆயதம் இந்த மனுசன் தான். அப்பாவை எதிர்க்கும் தைரியம் துளசியிடம் இருந்ததில்லை. என்று நினைத்துக் கொண்டு கோமதி மௌனமாகி விட்டாள்.
மாலை அப்பா வேலையால் வந்த பின் ஒரு பிரளயமே வீட்டில் நடந்தது. கூடுதலான பேச்சு வேண்டியது கோமதிதான். அது அப்பாவின் றிக்ஸான நடத்தை. தாங்களே பேச்சு வாங்குவதை விட அம்மா பேச்சு வேண்டினால் அது பிள்ளைகளைக் கூடுதலாகப் பாதிக்கும் என்பது மனோதத்துவம். அதை அவர் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன் படுத்தத் தவறுவதில்லை. கூடவே மானம், மரியாதை, சமூகம், அந்தஸ்து என்று பயமுறுத்தி விடுவார்.
இன்றும் அவர் கடைசி ஆயுதத்தை எடுத்து விட்டார். "நான் எவ்வளவு மானம் மரியாதையா இருக்கிறன் தெரியுமோ? இதெல்லாம் உன்னாலை...! ஒரு பெரிய பிரசங்கமே வைத்து விட்டார்.
அம்மாவோடு நியாயம் பேசிய துளசி அப்பா முன் தோற்றுப் போனாள். தோற்க வைக்கப் பட்டாள். பிறகென்ன...? மீண்டும் துளசி கணவனோடு சேர்ந்து ஒன்றாக வாழ்வதென்பது தீர்மானமாகியது.
கோமதிக்கு துளசியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தனது கண்ணீரும் அப்பாவின் ஆளுமை நிறைந்த தந்திரமான பேச்சும்தான் துளசியை மேற் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டு விட்டது என்பதை கோமதியால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் சமூகம், கலாச்சாரம், பண்பாடு இவைகளுக்கு மத்தியில் இதை விட்டு வேறு வழி ஏதும் இருப்பதாகக் கோமதிக்கு தெரியவில்லை.
சமூகத்தின் முன் கணவனின் கெட்டித்தனத்தின் முன் துளசி விடயத்தில் வெற்றி கிடைத்து விட்டதை நினைத்து கோமதி சிரித்துக் கொண்டாள்.
ஆனால் துளசிக்குத் துளியும் பிடிக்காத, சந்தோஷம் தராத வாழ்வை வாழச் சொல்லி துளசியை கட்டாயப் படுத்தி அனுப்பியது தவறு என்று கோமதியின் மனம் கோமதியுடன் சத்தமில்லாமல் யுத்தமொன்றை நடத்திக் கொண்டேயிருந்தது.
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம்-ஊடறு (பெண் படைப்பாளிகளின் தொகுப்பு)
May2002

Sunday, April 10, 2005
அவர்கள் வரவில்லை
காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன.
"அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... "
பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான்.
"...ம்ம்ம்..."
காலைப் பரபரப்பில் பாணைக் கடிக்கவே மறந்தேன் என்றால் நம்புவானா...! பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுக்காய் அழுதேன் என்றால் நம்புவானா...! கற்தரையில் எம்மவர் நித்திரை கொள்வதை ஊர்க்கடிதம் சொன்னதில் தொடங்கி இந்திய வல்லூறுகள் எம்மவரை உயிர் வதம் செய்வதில் தொடர்ந்து... செம்மணிப் புதைகுழியில் எம் பெண்மணிகள் புதைந்தது வரை... சத்தியமாக நான் சித்திரைக்குப் பொங்கவில்லை என்றால் நம்புவானா...!
2002இல் பாதை திறந்த பின் எல்லோரும் மனசு பொங்க பானைகளிலும் பொங்கிய போது கூட நான் பொங்கவில்லை என்றால் இவன் நம்புவானா...!
பொங்கினேன்தான். ஒரேயொரு தரம். அது 1987இல். அதுதான் முதலும் கடைசியுமாய் நான் யேர்மனியில் பொங்கியது.
அப்போது ஜேர்மனிக்கு வந்து பதினொரு மாதங்கள்தான் ஓடியிருந்தன. ஜேர்மனியில் தமிழர்களே அதிகமில்லாத காலகட்டமது. இப்படி ஏதாவது தினங்களில்தான் ஆங்காங்கு இருக்கும் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். தமிழ்க் குடும்பங்கள் குறைவாயும் தமிழ் இளைஞர்கள் கூடுதலாயும் இருந்ததால் ஏதாவது ஒரு குடும்பத்தோடு ஒரு ஏழெட்டுப் பெடியள் கூடுவார்கள். அப்படித்தான் எங்கள் வீட்டுக்கும் சித்திரைப் பொங்கலைச் சாட்டிக் கொண்டு எனது கணவரோடு அகதி முகாம்களில் இருந்த ஏழெட்டுப் பேர் எட்டுத் திக்குகளிலும் இருந்து வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வரப்போவதாக தொலைபேசியில் அழைத்துச் சொன்ன போதே "பொங்கோணுமெண்டால் எங்கையாவது, சர்க்கரையும், தேங்காயும், பயறும் வேண்டிக் கொண்டு வாங்கோ" என்று எனது கணவர் சொல்லி விட்டார்.
நாங்கள் வாழும் நகரில் அப்போது எங்களை விட்டால் மருந்துக்குக் கூட வேறு தமிழ்வாசம் இல்லை. தமிழ்க்கடை - அப்படியும் எதுவும் இல்லை. தேங்காய் - அதைப் பார்த்தும் 11 மாதங்களாகி விட்டன. எனது பிள்ளைகளின் நிறைவேறாத ஆசைகளிகளின் வரிசையில் சம்பலும், பிட்டும் முதல் பத்துக்குள் இடம் பிடித்திருந்தன. பாவம் பிள்ளைகள் என்று நினைத்து ஒருதரம், ஒரு பக்கற் தேங்காய்ப்பூ வாங்கி அதையும் அரைக்க அம்மியோ, இடிக்க உரலோ இல்லாமல், கையால் பிசைந்து கொடுக்க, "இது சம்பலில்லை அம்மா.. " என்று அவர்கள் கண்களில் நீர் முட்டி நிற்க... எத்தனை தரம் "திரும்பிப் போய் விடுவோமா...!" என்று மனசு சஞ்சலப் பட்டிருக்கிறது.
பொங்கலுக்கு வந்த நண்பர்கள் பயறு, சர்க்கரை, தேங்காய்.. என்று எல்லாம் கொண்டு வந்தார்கள். அவைகளைப் பார்த்ததும் இன்னுமே ஜேர்மனியுடன் ஒட்ட முடியாமல் வரண்ட மனசோடு வாழ்ந்த எனது மனத்திலும், என் பிள்ளைகளின் முகங்களிலும் மெதுவான குதூகலக்களை எட்டிப் பார்த்தது.
விடிய என்னை விட வேளைக்கே பிள்ளைகள் எழும்பி விட்டார்கள். ஊரில் போலத் தொங்கி விளையாட முடியாவிட்டாலும், பொங்கிக் களிக்கலாம் என்பதில் கொஞ்சம் பிரகாசமாய் இருந்தார்கள்.
சாணத்தால் மெழுகிக் கல்லு வைத்துப் பொங்க முற்றத்துக்கு எங்கே போவது! அதுதான் மின்சார அடுப்பை மினுக்கி, பொங்கல் ஆயத்தங்களைத் தொடங்கினோம். உடைக்கப் போகும் தேங்காயிலிருந்து கிடைக்கப் போகும் இளநீருக்காக எனது பிள்ளைகள் ஆளுக்கொரு கிளாஸை ஏந்திக் கொண்டு நின்றார்கள். காற்றுப் போல இருக்கும் தேங்காயிலிருந்து வரப்போகும் இளநீரை எப்படி மூவருக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற யோசனையில் நான் இருந்தேன்.
வந்தவர்களில் ஒருவர் "அக்கா நான் தேங்காயை உடைச்சுத் திருவித் தாறன்" என்று சொல்லி சுத்தியலால் அடித்து உடைத்தார். உள்ளே தேங்காய் இருக்கவில்லை. காய்ந்து கறுத்துப் போன ஏதோ ஒன்று இருந்தது. இளநீர் வராத தேங்காயின் உள்ளீட்டைப் பார்த்த எனது பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த அந்த ஏமாற்றம்... அது என்றைக்குமே எனக்கு மறக்காது.
இனி என்ன செய்வது...! ஓடிப் போய் இன்னொரு தேங்காய் வாங்கிக் கொண்டு வர பக்கத்தில் என்ன இரத்தினத்தின் கடையா இருக்கிறது! பேசாமல் பசுப்பாலை விட்டுப் பொங்கினோம். வாழையிலையோ, வெற்றிலை, பாக்கோ இல்லை. சூரியன் கூட எந்தத் திசையில் உதிக்கிறது என்று தெரியவில்லை. அதனால் படையலுமில்லை. காகம் அதைக் கண்டும் 11மாதங்களாகி விட்டன. ஒரு நண்பன் யன்னலைத் திறந்து "கா... கா..." என்று சும்மா விளையாட்டுக்குக் கத்தி விட்டு ஒரு பிடி பொங்கலை வெளியில் எறிந்தான். "ஏய் பொலிஸ் கண்டால் பிறகு ஃபைன் கட்டுவாய்." இன்னொருவன் கத்தினான்.
எல்லோரும் கூடியிருந்து சாப்பிட்டோம். எல்லா வெறுமைகளையும் மீறிய ஒரு குதூகலம். அன்றைய அந்தக் குதூகலம்... அது இரண்டு மணி நேரமாவது நீடித்திருக்குமா..! தெரியவில்லை. ஊரிலிருந்து கடிதம் தேடி வந்தது.
"சித்திரைப் பொங்கலன்று பார்த்துக் கடிதம் வந்திருக்கு. வாழ்த்து அனுப்பியிருக்கினம் போலை." நண்பர்கள் என்னைச் சந்தோசிக்க வைத்தார்கள். எனக்கு ஊர்க்கடிதம் கண்டதில் சந்தோசப் படபடப்பு. அவசரமாய் பிரித்தேன்.
வந்த கடிதம் ஊரிலிருக்கும் வீட்டிலிருந்து வந்திருந்தால் நிலைமையில் பெரியளவான மாற்றம் ஏற்பட்டிருக்காது. வந்ததோ களத்திலிருந்து. தம்பிதான் எழுதியிருந்தான். அவன் அதை மை தோய்த்து எழுதவில்லை. அன்பைத் தோய்த்து எழுதியிருந்தான். உணர்வுகளை வரிகளாக்கியிருந்தான். ஆயுதந் தூக்கிய அவனுக்குள்ளா இத்தனை ஈரம்! வாசிக்கும் போதே கண்கள் குளமாகி விட்டன. அதற்கு மேல் என்னால் முடியவில்லை. எங்கோ கல்லிலும் முள்ளிலும் எங்கள் உடன் பிறப்புக்களின் காலடிகள் நோக, இங்கு எமக்குப் பொங்கல் தேவையோ என்று மனசு விம்மியது.
அதன் பின் எத்தனையோ தைப்பொங்கல்களும், சித்திரைப் பொங்கல்களும் வந்து வந்து போய் விட்டன. என் மனசில் மட்டும் பொங்கும் எண்ணம் வரவேயில்லை. "எமது சகோதரர்கள் எல்லோருமே எம்மிடம் திரும்பி வரவேண்டும்" என்ற மந்திரம் மட்டும் எனக்குள் மீண்டும் மீண்டுமாய் உச்சரிக்கப் பட்டது.
2000 இல் ஆனையிறவு மீட்கப் பட்ட போது அனேகமானோர் கூடிக் களித்தார்கள். அப்போதும் என்னால் முடியவில்லை. போர்க்களத்திலே வீழ்ந்தும், குருதி வெள்ளத்திலே சாய்ந்தும் போனவர்களின் தியாகமும் அவர்கள் ஈன்றவர்கள் மனதை பற்றி நிற்கும் சோகமும் என்னையும் தொற்றிக் கொண்டன. திரும்பி வராத சகோதரர்களை எண்ணி மனசு அழுதது.
2002இல் ஏ9 பாதை திறந்த போதும் பொங்கும் எண்ணம் வரவில்லை. வன்னி எப்படி இருக்கிறது? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்? என்று பார்க்கவேண்டும், உதவவேண்டும் என்ற ஆசைதான் எழுந்தது. போனேன். அப்போதுதான் போரின் உக்கிரம், ஆறாத வடுக்களாய் மனிதர்கள் மேல் பதிந்திருப்பதைக் கண்டேன்.
எத்தனை இல்லங்கள்! அத்தனைக்குள்ளும்... அங்கவீனர்களாய்.. பார்வையிழந்தவர்களாய்.. உறவை இழந்தவர்களாய்... மனநோயாளிகளாய்..... யேர்மனி திரும்பியபின்னும் அந்த நினைவுகள் மனசைத் திருகின. பொங்கும் எண்ணம் வரவேயில்லை.
ஆனால் வேறொரு எண்ணம் வந்தது. எனக்குத் தெரிந்த நம்பிக்கையான குடும்பங்களிடம் பணம் அனுப்பினேன். "ஏதாவது இல்லங்களுக்குப் போய் அங்கு பொங்கி அந்த உறவுகளோடு களிக்கும் படி" சொன்னேன். அதன் தொடராய் இம்முறையும் அந்தக் குடும்பம் வன்னியில் உள்ள ஏதாவதொரு இல்லத்தில் பொங்கியிருக்கும். அங்கு சில உள்ளங்களும் சந்தோசங்களில் பொங்கியிருக்கும். அந்த நினைப்பே எனக்குப் போதுமாயிருந்தது.
இதையெல்லாம் சொன்னால் இவன் நம்புவானா..? என் வீட்டில் பாலும், சர்க்கரையும், பயறும் மணக்க நான் பொங்கவில்லை. ஆனால் என் தாயகத்தில் பொங்கல் மணத்திருக்கும் என்ற நினைப்பில் என் மனசு பொங்கியது என்றால் இவன் நம்புவானா?
அதனால்தான் கூசாமல் பொய் சொன்னேன்.
"ஓம் தம்பி பொங்கியாச்சு."
என் பொய்யில் முகம் மலர்ந்து முன்னேறிப் போறவனும் மூக்கைத்தான் தேய்க்கிறான் கண்களையும் கசக்குகிறான் அழகிய மலர்களின் நுண்ணிய மகரந்தக்களுக்கு இவன் மூக்கும் பலிதானோ...!
சந்திரவதனா
ஜேர்மனி
10.4.2005

Monday, April 04, 2005
பால்வினைத் தொழில்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.
தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான விபச்சாரமும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் விபச்சாரமும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.
பின்லாந்தில் விபச்சாரம் தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை.
இங்கு யேர்மனியில் பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன் படுத்தப் படுகின்றன.
இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.
இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும் - வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான சைப்பிரசுக்குச் சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள்.
இரண்டாவது வகையினர் கூடுதலாக போலந்து, செக்கொஸ்லொவோக்கியா, உக்ரையின் போன்ற நாடுகளிலிருந்து தரகர்களால் கடத்திக் கொண்டு வரப்பட்டு கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
இப்படி கடத்தி வரப் படுபவர்கள் விரும்பினால் கூட மீள முடியாத படி, துப்பாக்கி முனையிலும், குண்டர்கள் மத்தியிலும் காவல் வைக்கப் பட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் சொற்பமே. இவர்களின் உடலுக்காகக் கிடைக்கும் பணத்தில் 70 வீதத்தைத் தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மிகுதி 30 வீதமே இவர்களிடம் கொடுக்கப் படுகிறது.
இது ஒரு துன்பியல் நிறைந்த நரக வாழ்க்கை. கட்டாயத்தின் பேரில் ஒருத்தி தன் உடலை ஒருவனின் இச்சைக்கு இரையாக்க பெண்களை நாடு கடத்தி விற்கும் இடைத் தரகரும், பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து இச்சை தீர்க்க வரும் ஆண்களுக்கு பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டிப் பேரம் பேசி சிலமணி நேரங்களுக்கோ அல்லது ஒரு இரவுக்கோ வாடகைக்கு விடும் தலைமைத் தரகரும் அதில் பணம் சம்பாதிக்கும் அவலம் மிகவும் கொடுமையானது.
அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாலிப வயதுப் பெண்கள் நினைக்கிறார்கள் யேர்மனி பணக்காரநாடு. அங்கு போனால் நல்ல வேலையுடன் வசதியாக வாழலாமென்று. அதனால் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களைத் தேடி யேர்மனியின் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவருக்கான வேலைக்கோ, அல்லது பிள்ளைகளைப் பராமரிக்கும் பேபிமைண்டர் வேலைக்கோ அல்லது இது போன்ற இன்னும் வேறு வேலைகளுக்கோ விண்ணப்பிக்கிறார்கள்.
இது கூடுதலாகத் எமது தாயகத்திலிருந்து சவுதி போன்ற கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் எமது தமிழ் சிங்களப் பெண்கள் செய்வது போன்ற ஒரு ஒப்பந்தத்துடனான ஒரு வருட அல்லது இன்னும் கூடிய காலங்களுக்கான வேலையாகவே கருதப் படும்.
ஆனால் தாமும் பணம் சம்பாதிக்கும் காலம் ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இப்படி விண்ணப்பித்து வேலைக்கென யேர்மனிக்கு வந்து சேரும் வாலிபவயதுப் பெண்களுக்கு யேர்மனியில் காத்திருப்பது ஒரு பயங்கரமான, அருவருப்பான துயரம் தோயந்த எதிர்காலமே!
கூடுதலாக பேர்லினிலோ அல்லது ஹம்பேர்க்கிலோ தான் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கு சென்ற பின்தான் அவர்கள் கட்டாய பால்வினைத் தொழில் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு விளங்கப் படுத்தப் படும். அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் பலாத்காரப் படுத்தி பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுவார்கள்.
இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை. கடத்தி வந்தவர்களைக் காவலில் வைத்திருப்பது போலவே இவர்களும் தப்பியோட முடியாத படி துப்பாக்கி முனைகளும் குண்டர்களும் காவலுக்கு நிற்பார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பெண்கள் தப்பியோடினால் அவர்களது தாய்நாட்டில் இருக்கும் அவர்களது பெற்றோர்களும் சகோதரர்களும் துன்புறுத்தப் படுவார்கள், அல்லது கொலை செய்யப்படுவார்கள் என்று சொல்லிப் பயமுறுத்தப் படுவார்கள். இந்திய தமிழ் சினிமாக்களில் வரும் பிளாக்மெயில் தனமான வில்லத்தனம் போலவே அந்தப் பயமுறுத்தல் இருக்கும்.
இந்தத் தரகர்கள் கொடுக்கும் இப்படியான அதீதமான அழுத்தங்களினால் பொலீசிடம் போய் முறையிடும் துணிவு கூட இந்தப் பெண்களுக்கு இல்லாது போய்விடும்.
அதுமட்டுமல்லாமல் இந்த விபச்சார விடுதிகளை நடாத்துபவர்களின் முறைப் படி, தலைமைத் தரகரால் அப் பெண்கள் சில இரவுகிளப்புகளுக்கும் அரைகுறை ஆடைகளுடனோ அல்லது ஆடைகளே இல்லாமலோ நடனமாட கட்டாயமாக அனுப்பி வைக்கப் படுவார்கள்.
பல பெண்கள் உக்ரையின், லிற்றவ்வன், லெற்லாண்ட், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விசாவுக்கென ஏஜென்சியிடம் 1500டொச்சமார்க் கொடுத்து எதிர்காலத்தைப் பற்றியதான பலத்த நம்பிக்கையுடன் இங்கு யேர்மனிக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் இங்கே வந்ததும் தான் தாம் ஏஜென்சியால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து தெரிந்து நம்பிக்கைகள் எல்லாம் தவிடு பொடியாக மனமுடைந்து, ஆனாலும் விடுதலையோ அதை விட்டு வெளியேற ஒரு வழியோ தெரியாமல் துவண்டு போகிறார்கள்.
இவர்களைக் கூட்டி வந்த தரகர்கள் இவர்களை விபச்சார விடுதிக்கு விற்பனை செய்வார்கள். இவர்களின் பெறுமதி சிலசமயங்களில 25000யூரோ வரை கூட உயர்ந்திருக்கும். உக்ரையின் நாட்டுப் பெண்கள் அழகானவர்களாம். அவர்கள்தான் அதிகம் விலை போவார்கள்.
இடைத் தரகர் அந்தப் பணத்தை முக்கிய தரகரிடம் பெற்றுக் கொண்டு போன பின்னர் அந்த முக்கிய தரகர் தான் கொடுத்த 25000யூரோவையும் இந்தப் பெண்களிடமே பெற்றுக் கொண்டு விடுவார். அதாவது இந்தப் பெண்கள் தமது உடலை இன்னொரு ஆடவனின் இச்சைக்கு இரையாக்கும் போது வரும் பணத்தில் அந்த 25000யூரோ கணக்கு வைத்துக் கழிக்கப் படும்.
எப்படியானதொரு கொடுமை இது என்பது எத்தனை பேருக்குப் புரியும்.
புரிந்த ஆண்கள் கூட தமது இச்சை தீர்ந்தால் போதுமென்ற எண்ணத்துடன் இப்படியான சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று இந்தக் கொடுமைகளுக்கு உரமும் வலுவும் கொடுப்பது எத்துணை அவலமானது.
யேர்மனியில் மட்டும் ஒரு நாளைக்கு பத்துஇலட்சம் ஆண்கள் விலைமாதர்களிடம் போய் வருகிறார்களாம்.
இதே நேரம் எல்லாப் பெண்களுமே கடத்தப் பட்டு பலாத்காரத்தின் பேரில்தான் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. போலந்து, செக்கொஸ்லொவோக்கியா போன்ற நாட்டுப் பெண்களில் பலருக்கு இங்கு யேர்மனியில் வேலை என்ற பெயரில் என்ன காத்திருக்கிறது என்பது தெரியும்.
ஆனாலும் வறுமை, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் போன்ற காரணங்களால் யேர்மனிக்கு வந்து இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
சிலகாலங்களுக்கு உழைத்து விட்டு, அந்தப் பணத்துடன் தாய் நாடுகளுக்குத் திரும்பி நல்லதொரு வசதியான வாழ்வைத் தொடங்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை நிறைந்த ஆசை. அதற்காக ஏஜென்சிக்கு 750யூரோ கொடுத்து சட்டத்துக்கு முரணாக விசா பெற்று அவர் மூலமாகவே இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்து பால்வினைத் தொழிலை பணத்துக்கான ஒரு தொழிலாகச் செய்கிறார்கள்.
இப்படித் தாம் விரும்பி இத்தொழிலில் ஈடுபடும் கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே! மிகுதி 70 வீதமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களும் ஏஜென்சிமார்களால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டு விபச்சார விடுதி நடத்துனர்களாலும், இரண்டாவது தரகர்களாலும் கட்டாய பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது யேர்மனிய அரச நிறுவனங்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த இரண்டாவது வகைப் பால்வினைத்தொழில் செய்யும் பெண்களில் தாய்லாந், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டுப் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களால் ஏமாற்றப் பட்டே இங்கு அழைத்து வரப் படுகிறார்கள். ஐரோப்பிய ஆண்கள் இந்தக் கொடுமையைச் செய்வதற்கென்றே உல்லாசப் பயணிகளாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். அங்கு வறிய அழகிய பெண்கள் மேல் காதல் கொண்டது போல நடித்து, திருமணம் செய்வதாகப் பொய் சொல்லி இங்கு கூட்டி வந்து பால்வினைத் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள். இந்த ஆண்களில் பெண்களை இங்கு கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். சொந்தமாகவே விபச்சாரவிடுதி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை விட பெண்களை ஏமாற்ற முடியாத பட்சத்தில் கடத்தியும் கொண்டு வருகிறார்கள். கடத்தலுக்கு இடைத்தரகராக நின்று உதவி செய்பவர்கள் பெரும்பாலும் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களாகவே இருக்கிறார்கள்.
சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பஸ் ஏறினேன். நான்கு மணித்தியாலப் பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாமிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன். " என்று.
2002 மாசி பிற்பகுதியில் பேர்லினில் அங்கீகாரம் பெற்ற ஒரு விபச்சாரவிடுதியில் ஏறக்குறைய 1000 வெளிநாட்டுப் பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், அவர்களால் அவர்களை வாடிக்கையாளர்களிடம் வாடகைக்கு விடும் தலைமைத் தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாகவே கண்டு கொள்ளப்பட்டார்கள்.
சிலபெண்கள் - இவர்களைப் பெண்கள் என்று சொல்வதை விட சிறுமிகள் குழந்தைகள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு இளம் வாலிப வயதுப்பெண்கள் இவர்கள். தரகர்களிடம் முரண்படும் சமயங்களில் தரகர்களால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள்.
பேர்லினில் இந்த வருட பெப்பரவரி மாத இறுதியில் ஒரு ரஷ்ய இளநங்கை மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் பொலீசாரால் விடுவிக்கப் பட்டிருக்கிறாள். இவளை 3 ரஷ்யர்கள் 8மணி நேரமாகத் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்த ரஷ்யர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாளாம். அதைக் கொண்டாடு முகமாகவே அந்த இளநங்கை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறாள்.
எல்லோரும் நினைப்பது போல போலந்து நாட்டையோ ரஷ்ய நாட்டையோ சேர்ந்த தரகர்கள்தான் பெண்களை கட்டாய பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலான விபச்சார விடுதிகளின் சொந்தக் காரர்களும், தலைமைத் தரகர்களும் யேர்மனியர்களாகவே இருக்கிறார்கள். ரஷ்சியர்கள் அனேகமாக இடைத் தரகர்களாகத்தான் இருக்கிறார்கள்.
விபச்சார விடுதிகளிலும் தரகர்கள் மத்தியிலும் பெண்கள் கடைச்சரக்குகளாகத் தான் பாவிக்கப் படுகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் குறைவானதே. சராசரியாக
அரைமணித்தியாலத்துக்கு ஒரு அறைக்கு 50யூரோ என்றே வசூலிக்கப் படுகிறது. இதில் அந்த அரைமணி நேரமும் யாரோ ஒரு காமுகனின் இச்சைக்கு எந்த உணர்வுகளுமின்றிய ஒரு ஜடம் போல தன் உடலை பலியாக்கிய பெண்ணுக்குக் கிடைப்பது வெறும் 15யூரோ மட்டுமே.
கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய்தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு யேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் யேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.
ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு யேர்மன் ஆண்
7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு யேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.
இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள்.
தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள்.
எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.
இந்த விலைமாதர்கள் மீது அங்கு வந்து போகும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது விருப்பமோ காதலோ வந்தால், விலைமாதின் வயதுக்கும், உடல்வாகுக்கும், அழகுக்கும் முக்கியமாக அவளால் விடுதிக்கும் தரகருக்கும் வரும் வருமானத்துக்கும் ஏற்ப பேரம் பேசப்பட்டு, அவள் வாடிக்கையாளருக்கு விற்கப் படுவாள். அவள் தன்னை ஒரு கடைச்சரக்காக, அழுக்குத் துணியாக உணர்ந்து கொண்ட போதும், அவளின் பெறுமதி பல்லாயிரக்கணக்காக இருக்கும். அவளின் இந்தப் பெறுமதி 25000யூரோ வைக் கூடத் தாண்டியிருப்பதாக பேர்லினைச் சேர்ந்த பெண்கள் சங்கத்துக்கான காரியதரிசி Helga Korthaase சொல்கிறார்.
இவர்களில் ஓரிருவர் வாடிக்கையாளர்களால் நியமாகவே காதலிக்கப் பட்டு விடுதலை பெற்று குடும்பம் குழந்தையென்று வாழும் நிகழ்வுகளும் அபூர்வமாக நடந்துள்ளன.
இந்த வருட ஆரம்பத்தில் விலைமாதர்கள் தமது பால்வினைத்தொழிலை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றதொரு சட்டம் யேர்மனியில் அமுல் படுத்தப் பட்டது. பதிவு செய்வதால் அவர்களுக்கான எல்லா காப்புறுதிகளும் செய்யப் பட்டு, அவர்களது எதிர்காலம் செழுமைப் படுத்தப் படும் என்பதும், பதிந்து பால்வினைத் தொழிலைச் செய்யும் போது தரகர்களினதும் விபச்சாரவிடுதி நடத்துனர்களதும் அவர்கள் மீதான அராயஜகம் தவிர்க்கப்படும் என்பதும் யேர்மன் அரசின் நம்பிக்கையான நன்நோக்கம்.
இந்தக் காப்புறுதிகளில் சுகவீனக்காப்புறுதி, பென்சன்காப்புறுதி... போன்ற பல நல்ல விடயங்கள் அடங்குகின்றன. ஆனாலும் இதுவரையில் எந்தப் விலைமாதரும் வந்து இதற்கான அலுவலகத்தில் தம்மைப் பதிந்து கொள்ளவில்லையென இவர்களுக்கான சட்டங்களுக்கும், தேவைகளுக்கும் பொறுப்பான Juanita Henning கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரு விலைமாது கொடுத்த பதில் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. அவர் கூறுவதாவது "பால்வினைத்தொழிலில் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் அந்த வேலை செய்பவர்களை மற்றைய வேலைகள் செய்பவர்கள் போலக் கருதாமல் ஒரு வர்த்தக நிறுவனம் வைத்திருப்பவர் போலவே கருதுகிறார்கள். அதனால் அதற்காக வசூலிக்கப் படும் வரிகளும் வர்த்தகர்களுக்குப் போலவேதான் வசூலிக்கப் படும். அதாவது ஒரு விலைமாது ஒருநாளைக்கு 250யூரோ உழைப்பதாகக் கணக்குப் போட்டு அதன் படியே எல்லா வரிகளும் காப்புறுதிகளுக்கான பணங்களும் அறவிடப்படும். இது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே நானுறுஆயிரம் விலைமாதர்களில் ஒருவர் கூடப் பதிந்து கொள்ள முன்வரவில்லை."
இந்த விபச்சாரம் யேர்மனியில் மட்டுந்தான் என்று சொல்வதற்கில்லை. உலகளாவப் பரந்து கிடக்கிறது. மேற்கு ஆபிரிக்காவில் உள்நாட்டுச் சண்டை காரணமாக கென்யா, சீராலியோன்... போன்ற நாடுகளிலிருந்து தப்பியோடி வரும் பெண்குழந்தைகள் அவர்களுக்கான உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு பின்னர் விலைமாதர்கள் ஆக்கப் படுகிறார்கள்.
பெண்குழந்தைகள் பாலுறவுக்கு இணங்கும் பட்சத்திலேயே அவர்களுக்கு உண்ண உணவும், நோய்களுக்கான மருந்தும் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் வேலைசெய்யும் 70 பேர்கள், இந்தத் துர்வேலையைச் செய்து கொண்டிருந்ததை UNO உதவி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.
இதற்கு ஃபறீ ரவுணைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார். "இது ஒன்றும் புதிதல்ல. இங்கு உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுடன் பாலுறவு கொள்வதால்தான் அகதிகளாகத் தப்பியோடி வந்த சிறுமிகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். " என்று.
UNHCR சொல்கிறது. "ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு உடை மருந்து பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்." என்று
பால்வினை என்னும்
பாழ் கிணற்றுக்குள்
வாழ்விழந்த பெண்கள்
மீள வழி உண்டா.........!
ஏழ்மையினாலும்
சில மனிதர்களின் இச்சையினாலும்
சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்
ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!
இவர்கள் உள்ளங்களும்தான்!
சந்திரவதனா
யேர்மனி
May - 2002
பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002

Subscribe to:
Posts (Atom)