குருதியால்
வரி வரியாய்
சரிதம் எழுதியவர்கள்!
எதிரியைக் கிழிக்க
தம்மையே ஆயுதமாக்கி
வெடி குண்டாய் வெடித்தவர்கள்!
விடுதலை வேள்விக்காய்
உயிரினைப் பலி கொடுத்து
உடலினைக் கருக்கியவர்கள்!
மண்ணுக்கு உரமேற்ற
உயிர் வேர் பதித்து
மரணத்தை அணைத்தவர்கள்!
ஆசா பாசாங்களைப் போலவே
தம் இன்னுயிரையும்
துச்சமாக நினைந்து
தூக்கி எறிந்தவர்கள்!
கணப் பொழுதுகளில்
எம் கண்களில் எல்லாம்
நீர் கோர்த்து விட்டு
காற்றிலே கலந்த
காவிய நாயகர்கள்!
எம் நினைவுகளில் என்றும்
நீங்காமல் நின்று
நிழலாடும் ஒளிச்சுடர்கள்!
மரணத்தையே வென்ற
மாவீரர்கள்!
சந்திரவதனா
யேர்மனி
30.11.2000
No comments:
Post a Comment